Face Upward - Widget

எங்கும் நிறைந்த தமிழனின் மனிதநேயம். படித்ததில் பிடித்தது

Loading...

ஒரு நிமிடம் தாமதமாக வந்தார்களைக் கூட நீட் தேர்வு எழுத அனுமதிக்காத அவலம் நிகழ்ந்திருக்கிறது. ஒரே பெயரில் பல பள்ளிகள், வேறு மாநிலங்களில் தேர்வு மையம் என மாணவர்களுக்கு குழப்பத்துக்கு மேல் குழப்பம். சேலத்தில் வித்யா மந்திர் என்ற பெயரில் பல பள்ளிகள் இருக்கிறது. செவ்வாய்பேட்டை வித்யா மந்திர் பள்ளிக்கு செல்ல வேண்டிய மாணவன் ஒருவன், மெய்யனூரில் உள்ள வித்யா மந்திர் பள்ளிக்கு வந்துவிட்டான்.

மாணவனை உள்ளே அனுமதிக்கவில்லை. தேர்வுக்கு 20 நிமிடங்களே உள்ள பரபரப்பான சூழ்நிலை. கதறி அழ ஆரம்பித்துவிட்டான் அந்த மாணவன். விகடன் புகைப்படக்காரர் விஜயகுமார் அந்த சூழ்நிலையை கவனித்தபடி இருந்திருக்கிறார். சற்றும் தாமதிக்காமல் அந்த மாணவனை தன் பைக்கில் ஏற்றிக் கொண்டு செவ்வாய்பேட்டையை நோக்கிப் பறந்திருக்கிறார். டிராபிக், சிக்னல் என எல்லாவற்றையும் கடந்து விஜயகுமார் பைக் சீறியிருக்கிறது.

 
தேர்வு தொடங்க சரியாக 4 நிமிடங்களுக்கு முன்பாக அந்த மாணவனை கொண்டு போய் பள்ளியில் சேர்த்திருக்கிறார். பைக்கில் இருந்து இறங்கும்போதுதான், ‘அண்ணா என்னோட பேரு அஜித். நான் விருதாச்சலத்துல இருந்து வரேன். சேலம் இதுக்கு முன்னாடி நான் வந்ததே இல்லை...’ என சொல்லிவிட்டு பள்ளிக்குள் ஓடியிருக்கிறான்.

அஜித்க்கு கைகொடுக்க சேலத்தில் விஜய் கிடைத்திருக்கிறார். எர்ணாகுளத்தில், ராஜஸ்தானில் இன்னும் எத்தனை அஜித்கள் இப்படி அழுது துடித்து அலைந்திருப்பார்கள்?

அன்பும் வாழ்த்துக்களும் விஜய்!

- படித்ததில் பிடித்தது
Loading...
tamizilnews. Powered by Blogger.