Face Upward - Widget

சமய குருவும் நோய்வாய் பட்ட மனிதரும் - சிந்திக்க வைக்கும் ஆன்மீக கதை

Loading...
ஒருவர் வெகுநாட்களாக நோயால் பாதிக்கப்பட்டு அவதியுற்று வந்தார்.

ஒரு நாள் அவரைப் பார்க்க, சமய குரு ஒருவர் அவர் வீட்டிற்கு வந்தார்.
*வாடிய உடலோடு, மனமும் சோர்வுற்ற நிலையில் இருந்தார் அந்த நோயுற்றிருந்த நபர்.*

இதைப் பார்த்த சமய குரு, நாம் அனைவரும் *இவருக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்வோம் என கூறி மனதுருகி அவருக்காக ஜெபம் செய்தார்.*
அங்கிருந்த அவரது *நண்பர்களும், உறவினர்களும் அவரோடு இணைந்து கடவுளை வேண்டினார்கள்.*

*~அதன்பின் அந்த சமய குரு, "இறைவனின் அருளால், நிச்சயம் உங்களுக்கு நோய் குணமாகி விடும். இத்தனை பேரும் உங்கள் நோய் குணமாக வேண்டி இருக்கிறார்கள். உங்களுக்கு உடல் நிலை சரியாகி விடும்" எனக் கூறினார்.~*

அந்த கூட்டத்தில் இறைவழிபாடு மற்றும் ஜெபங்களின் சக்தியின்மேல் *நம்பிக்கை இல்லாத ஒருவன் இருந்தான்.*

சமய குரு சொன்னதைக் கேட்டதும் நக்கலாய் அவன் சிரிக்கத் தொடங்கினான். *"வெறும் வார்த்தைகள் போய் அவனைக் குணப்படுத்துமா? அல்லது வெறும் சொற்கள் மாற்றத்தை ஏற்படுத்துமா?"* என கூறி சிரித்தான்.

அதற்கு அந்த சமய குரு, *"இந்தக் கூட்டத்திலேயே மிகப் பெரிய முட்டாள், மூடன், மூர்க்கன் நீங்கள் தான்"* என சொன்னார்.

இதைக் கேட்டதும் அவன், "நீங்கள் கூறியதற்கு உடனே *மன்னிப்பு கேளுங்கள். இல்லையே உங்களை அடித்து விடுவேன்" என்றபடி அடிக்கப் பாய்ந்தான்.*

பதற்றமே இல்லாத அந்த சமய குரு, "முட்டாள், மூடன், மூர்க்கன் என்பது *வெறும் சொற்கள் தானே, அவை உங்களை இப்படி மாற்றி விட்டதே, எப்படி? இந்தச் சொற்கள் உங்களை எப்படி தூண்ட முடிகிறதோ, அதே போல தான் நல்ல சொற்களால் பல மாற்றங்களை ஏற்படுத்த முடியும்"* என்றார். இதைக் கேட்ட அவன் வெட்கித் தலை குனிந்தான். நம் எண்ணங்களுக்கும், வார்த்தைகளுக்கும் சக்தி உள்ளது என்பதை ஆராய்ச்சியாளர்கள் பலர் கண்டுபிடித்துள்ளனர்.

பல நூறு வருடங்களுக்கு முன்பே, *'நல்லதையே நினை. நல்லதையே பேசு'* என அழகாக நம் முன்னோர்கள் சொல்லியுள்ளனர் !
Loading...
tamizilnews. Powered by Blogger.