Face Upward - Widget

மருமகள் நைட்டி போட்டதால் வந்த சண்டை - சில மறுக்க முடியாத உண்மைகள்

Loading...
மருமகள் நைட்டி போட்டதால் சண்டை வந்த வீடுகளில் எல்லாம், பேத்திகள் லெக்கிங்ஸ் போடுகிறார்கள்!👄👩🏼👖👠👜

தான் செஞ்ச தவறை, பொண்டாட்டிகிட்ட மறைக்கிறவன் சராசரி மனுஷன்; தனக்கு ஒரு பொண்டாட்டி இருக்கிறதையே மறைக்கிறவன் பெரிய மனுஷன்!😇🤡

“உன்னைப் பற்றி எனக்குத் தெரியாதா?” என சண்டையில் கேட்பவர்கள், தெரிந்திருந்தும் ஏன் பழகினார்கள் என்றுதான் தெரியவில்லை!🗿🚥⛱✈

OMR -ல சம்பாதிக்கிறதை ECR-ல செலவு பண்றாங்க!🍿🥛🍻🥃

குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதை குழந்தைகளிடம் கற்றுக்கொள்ளுங்கள். அவர்கள் பொம்மைகளை அழவிடுவது இல்லை!😺😺😽👶

ஆண்களின் பெருமையான குறைகளில் ஒன்று... ‘அன்பாக இருக்கத் தெரியும்; ஆனால், யார் மீதெனத் தேர்ந்தெடுக்கத் தெரியாது!’😅😆🤠

ஒரு நடிகர் நாலு பொண்ணுங்களோடு ஆடினா, அது ‘ஓப்பனிங் சாங்’காம். அதே ஒரு நடிகை நாலு பசங்களோடு ஆடினா, அது ‘அயிட்டம் சாங்’காம். ஆணாதிக்கச் சமூகம்!💃🏼👯‍♂🕺🏻👗

கரப்பான் பூச்சியைப் பார்த்தா பயப்படுறாங்க... அவ்ளோ பெரிய கரடி பொம்மையைக் கட்டிப்பிடிச்சுத் தூங்குறாங்க. என்ன டிசைனோ தெரியல!🐼🐻🦋

நம்மதான் விளம்பரம் போடுறப்பல்லாம் சேனலை மாத்திடுறோமே... அப்புறம் ஏன் இவ்வளோ செலவு பண்ணி விளம்பரம் பண்றாங்க?💿📽📡

சண்டையின்போது அலைபேசியை யார் முதலில் துண்டிக்கிறார்கள் என்பதில் இருக்கிறது... யாருக்கு யார் அடிமை என்பது!👻🤳🏼

முன்னர் எல்லாம் மழைக்காலம் என ஒன்று இருந்தது. இப்போது மழை நாட்கள் மட்டுமே!⛈☔💦

Fact என்னன்னா, 88% மனைவிகளுக்கு தன் புருஷனோட ஃப்ரெண்ட்ஸைப் பிடிக்காது. 98% கணவன்களுக்கு தன் மனைவியோட ஃப்ரெண்ட்ஸை ரொம்பப் பிடிக்கும்!🤷🏼‍♀🏃🏼‍♀👨‍👦

ஆன்லைனால் மிச்சமான நம் நேரத்தை, ஆன்லைனிலேயே செலவழிக்கிறோம்!💯🈁📶🔈

நம்ம வீட்ல 24 மணி நேரமும் டி.வி ஓடிட்டே இருந்தாலும் கண்டுக்காத நாமதான், சலூன்ல வாயைப் பிளந்துகொண்டு பார்த்துட்டு உட்கார்ந்திருக்கோம்!🖥⚡💥

யாரும் இல்லாதபோதும் குழந்தைகள் காதுக்குள் வந்தே ரகசியங்கள் சொல்கிறார்கள்!🤰🏼🙎🏼👨‍👩‍👦‍👦

வீட்டில் ஒருவரை மொபைலில் தொடர்புகொள்ள முடியவில்லை என்றால், அவர்கள் ஏதோ ஆபத்தில் இருப்பது போன்ற பிரமை வருகிறது.📞📲📱

‘ஏன் எங்கிட்ட பேசல?’னு ஆரம்பிச்சு, பேசாம இருந்ததுக்காகச் சண்டைபோட்டு, அதுக்குத் தண்டனையா நம்மகூடப் பேசாம இருக்க பெண்களால் மட்டும்தான் முடியும்!⛄😥

ஒருகாலத்தில் நல்லா ஆங்கிலம் பேசறவங்களை வியந்து பார்த்த நாம, இப்ப நல்லா தமிழ் பேசறவங்களை வியந்து பார்க்கிற நிலைமைக்கு ஆளாகிட்டோம்!!🕺🏻🤹🏼‍♂

அப்பாக்கிட்ட காசு இல்லம்மா எனும் சொல் கேட்டு அழகாகத் தலையாட்டும் மகளின் புரிதல், தந்தைக்கு சோகமய மானது!💃🏼👫

காசு கொடுத்து கடவுளைப் பார்த்து, கடவுளுக்கும் காசு கொடுத்து, கடைசியில கடவுள்கிட்டயே காசு வேணும்னு கேட்கிறவன்தான் மனிதன்!🙏🙏

-படித்ததில் ரசித்தது-
Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.