Face Upward - Widget

கனவு தேசம் - நம்நாடு இப்படி இருந்தால் எப்படி இருக்கும்....?

Loading...
கனவு தான் பலிக்குமா...????!!!

நம் தமிழ்நாடு இப்படி இருந்தால் எப்படி இருக்கும்....???

நினைத்தாலே மனம் மகிழ்கிறது...

👉 கச்சத்தீவில் மீன்பிடித்து வருகிறேன் என் செல்லமே

- மீனவன்

👉 ஆறுபோகம் விளைகிறது, இந்த வருடம் பொங்கல் சிறப்பு

- விவசாயி

👉 அங்க பாருப்பா ! பாவம் தனியார் பள்ளிக்கூடத்துல படிக்கிறானாம்

- அரசுப் பள்ளி மாணவன்

👉 என்னது இங்லீஷ் மீடியமா . . ?? பாவம் வேலை இல்லாம கஷ்டப்படப் போறான் உன் புள்ள

- பெற்றோர்

👉 உனக்கென்னப்பா உங்கப்பா விவசாயி, எங்கப்பா IT கம்பெனியில் கஷ்டப்படுறாரு . . .

- இளைஞன்

👉 என்னப்பா அலங்காநல்லூரே கோலாகளமா இருக்கு ? ?

- ஜல்லிக்கட்டு அரசு விழாவாம்

👉 அமைச்சரா ? ? அவருக்க 4வது டோக்கன்

- அரசு மருத்துவமனை மருத்துவர்

👉 ஆடு,மாடு மேய்ச்சு அரசாங்க வேலை பாக்குற பையன் வேண்டும்

- கல்யாண மாலை

👉 என்னங்க கறி வாங்க சட்டி எடுத்துட்டு போங்க, பாலித்தீன் பை எல்லாம் இனி இல்லையாம்

- மனைவி

👉 உங்க அம்மாவ முதியோர் இல்லத்துல சேத்துருங்க . . . சும்மா இருடி ரேசன் கார்டை புடிங்கிருவாங்க..

- கணவன்

👉 ரசாயன உரத்தை தடை பன்னதும் , அடியேய் சிட்டுக்குருவி உன் ஆட்டம் ஓவராயிருக்கு..

- காக்கை

👉 என்னப்பா இது கனவு தேசமாயிருக்கு, அதுவும் உங்க இளநீர், கள்ளு

- வெளிநாட்டு பயணி

என்னடா சிக்னல்ல சைரன் 🚨🚓வச்ச வண்டி வரிசையில நிக்குது . . ????

அதுல முதலமைச்சர் இருக்காரு...!😉😊🤝👏🏻👍🏻
Loading...
tamizilnews. Powered by Blogger.