Face Upward - Widget

அரசு வேலை பார்த்து ஓய்வு பெற்ற மனிதர் செய்த காரியம் தெரியுமா? நெஞ்சை உருக வைக்கும் சம்பவம்

Loading...
தச்சநல்லூர் இரயில்வே மேம்பாலம்....

இங்குமங்குமாக வாகனங்கள் சரசரவென போய்க் கொண்டு இருக்கின்றன... இடது புற மேம்பால கைப்பிடிச்சுவர் ஓரமாக ஒரு நபர் குனிந்து ஏதோ செய்து கொண்டிருக்கிறார்.....

போகும் போதும் வரும் போதும் கண்ணில் பட்டவுடன்....,
அருகே சென்று ஐயா....

என்ன செய்கிறீர்கள் என்றேன். .. கையில் ஒரு பிரஷ் வைத்துக் கொண்டு மழை நீர் வடியும் சல்லலடைக் குழியில் உள்ள மணல்களை அகற்றிக் கொண்டு இருந்தார்.

ஐயா....

என்ன செய்கிறீர்கள்..? இந்த மழைத் தண்ணி விழும் ஓட்டையை . கிளீன் செய்வதாகச் சொன்னார்..

ஐயா.. எந்த ஊர் என்றால் ஒன்றுமில்லை..., இந்த ஊர் தான். கலெக்டரேட்டில் டெலிபோன் கிளார்க்காகப் பணியாற்றி ஓய்வு பெற்றவன்: பெயர். கந்தசாமி என்றார். இது என்னங்க வேலை என்ற உடன் புன்னகை ததும்ப குனிந்து நமக்கு நாமே தானே செய்யணும் என்று ஆனந்தமுற்று போனார்... 



எனெக்கென்ன என அக்கறையற்ற சுயநல சமுதாயத்தில் இப்படியும் சமுதாய அக்கறை உள்ள விந்தையான மனிதர்கள் இருக்கிறார்கள்

அரசு வேலை பார்த்து ஓய்வு பெற்ற பின் இப்படி பொது பணி செய்யும் உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ஐய்யா 🙏

Daiss
Loading...
tamizilnews. Powered by Blogger.