Face Upward - Widget

செம்பு பாத்திரத்தால் நமக்கு இவ்வளவு நன்மைகள் உண்டா?

Loading...
உணவு பொருளும்! செம்பு பாத்திரமும்!


உலகில் பிறந்த அனைத்து உயிரினங்களும் அவர்களின் அன்றாட தேவைகள் மற்றும் செயல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அவைகளில் உணவுப் பொருட்கள் மற்றும் அதை தயார் செய்யும் பாத்திரங்களும் முக்கிய இடம் பிடிக்கின்றது.

சமையல் பாத்திரங்கள் சமுதாய வளர்ச்சிக்கு ஏற்ப மண் பாத்திரம், சில்வர் பாத்திரம், செம்பு என மாறிக்கொண்டே வந்தது. ஆனால் தற்போது எண்ணெய் பயன்படுத்தாமல், பாத்திரத்தில் உணவு ஒட்டாமல் இருக்கும் நான்ஸ்டிக் சமீபத்திய டிரெண்ட் ஆகிவிட்டது.
 
மாற்றமானது சமைக்கும் பாத்திரத்தில் மட்டுமில்லாது நாம் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்துமே மாற்றமாகிவிட்டது. வாழை இலையில் தொடங்கி காலத்திற்கு தகுந்தாற் போல தற்போது பிளாஸ்டிக் பொருட்களை கடந்து வந்து கொண்டு இருக்கிறோம்.
 
ஆனாலும், செம்புப் பாத்திரங்களை அதிகம் பயன்படுத்துவது, உடல்நலத்தைக் காக்கும் என்று மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டு உள்ளது.
 
செம்புப் பாத்திரங்களின் நன்மைகள் :
 
மனித உடலுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் இ.கோலி மற்றும் பாக்டீரியாக்கள் அனைத்தையும் செம்பு அழித்துவிடும், மேலும் செம்பு பாத்திரத்தில் தண்ணீரைச் சேமித்துப் பயன்படுத்துவது கண்டிப்பாக நல்ல பலனைத் தரும்.
 
செம்புப் பாத்திரங்களின் மூலம் கிடைக்கப்பெறும் செம்புச் சத்துகள், மைலின் சுரப்பதற்கு துணைபுரியும் பாஸ்போலிப்பிடு உற்பத்திக்கு உதவுகிறது. இதனால், மைலின் வலுப்பெற்று, மூளையின் செயல்பாடு வேகம் பெறத் தொடங்கும்.
 
செம்பு, உடலில் உள்ள கொழுப்புச் சத்தைக் குறைப்பது மட்டுமில்லாது, செரிமான கோளாறுகளை போக்கும் ஆற்றலுடையது. மேலும், உடல் வெப்பத்தினை கட்டுகோப்பாக வைக்கும் தன்மை கொண்டது.
 
மெலனின் என்ற தோல்களுக்குத் தேவைப்படும் நிறமி உற்பத்திக்கு, செம்புச் சத்து முக்கியமான ஒரு காரணமாகும். சுற்றுப்புறத் தாக்குதல்களில் இருந்து தோல் காக்கப்படும். புதிய செல்கள் உருவாகத் தொடங்கும். காயம் ஏற்பட்டிருப்பவர்களுக்கு, அந்தக் காயங்கள் ஆறும். மேலும் அந்த இடத்தில் பளபளப்பான, புத்துணர்ச்சி நிறைந்த புதிய தோல்கள் உருவாகும்.
 
இரவு செம்புப் பாத்திரங்களில் தண்ணீர் சேமித்து வைத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் அதை அருந்தி வருவது நல்லது. செம்புச் சத்து அதிகமாகும்போது, ரத்தம் அதிகம் சுரக்கத் தொடங்கும். ரத்தச்சோகை பாதிப்பு இருப்பவர்கள், இதன்மூலம் அப்பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.
 
 மனித உடலைப் பொறுத்தவரை செல் உருவாவதில் இருந்து செம்பு சத்தானது அதிகம் தேவைப்படுகிறது. செம்பு கலந்த தண்ணீரை குடித்து வருவதன் மூலம் மூட்டுவலிகளில் இருந்து நிவாரணம் பெறலாம். செம்பானது மனிதர்களுக்கு ஆண்டி-பயாடிக் மற்றும் அலர்ஜிகளை கட்டுப்படுத்தும் திறனுடையது.

செம்புத் தாதுவை ஏற்றுக்கொள்ளாதவர்கள் :

அனைவருக்கும் அனைத்து செயல்களும் ஒத்து போகாதது என்பது இயற்கையின் நிகழ்வாகும். எனவே செம்புத்தாது போன்ற பாத்திரத்தில் செய்யப்படும் உணவு வகைகள் ஒரு சிலருக்கு உடல் ஏற்றுக் கொள்ளாது.
 
அந்த தருணத்தில் அவர்களுக்கு ஏற்படும் விளைவுகளை போக்க பதற்றப்படாமல் எலுமிச்சம்பழச்சாற்றில் உப்புப்போட்டு குடிக்க வேண்டும். இது, பிரச்சனையைச் சரிசெய்யும். செம்பு பாத்திரத்தை தினந்தோறும் நன்றாக சுத்தப்படுத்தி பயன்படுத்த வேண்டும்.
Loading...
tamizilnews. Powered by Blogger.