Face Upward - Widget

இந்திய அணியின் புதிய சாதனை! விராட் கோலி தலைமையில் நிறைவேறிய தருணம்

Loading...
ஆஸ்திரேலிய அணியுடனான முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. கடந்த சனிகிழமை நடந்த 20 ஓவர் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்தது.

டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் விராத் கோலி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணி 18.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்திருந்த போது மழை பெய்யத் தொடங்கியதால் ஆட்டம் தடைபட்டது. 
 

பின்னர் டக்வொர்த்-லீவிஸ் முறைப்படி, இந்திய அணி 6 ஓவர்களில் 48 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி ரோகித் சர்மாவும் ஷிகர் தவானும் களமிறங்கினர். அதிரடியில் ஈடுபட்ட ரோகித்தை கவுல்டர் நைல் போல்டாக்கினார். பின்னர், நான்கு பந்துகள் மீதமிருந்த நிலையில் இந்திய அணி வெற்றிபெற்றது.

விராத் கோலி, 14 பந்துகளில் 22 ரன்களுடனும் தவான் 15 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது இந்திய அணி.

இந்த டி20 வெற்றி இந்திய அணியின் (84 ஆட்டம்) 50வது டி20 வெற்றி, இந்தச் சாதனையை நிகழ்த்தும் 4-வது அணியாகும். 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகள் பெற்ற அணிகளின் வரிசையில் பாகிஸ்தான் (69 வெற்றி), தென்ஆப்பிரிக்கா (57), இலங்கை (51) ஆகிய அணிகளுக்கு அடுத்த இடத்தில் இந்தியா இருக்கிறது. 
 
விராட் கோலி தலைமையில் கிடைத்த 50வது வெற்றி என்ற இந்த சாதனையை பலரும் மகிழ்ச்சியோடு பகிர்ந்து வருகிறார்கள்.
Loading...
tamizilnews. Powered by Blogger.