Face Upward - Widget

சிரித்துவிட்டு சிந்திக்க அழகான கணவன் மனைவி ஜோக்!

Loading...

மனைவி; "என்னங்க உங்கம்மாவை முதியோர் இல்லத்தில் சேர்க்கப் போனீங்களே என்னாச்சு?"

கணவன்;"அதெல்லாம் சேர்த்தாச்சு"

மனைவி ;"எங்கம்மா சொன்னது சரிதாங்க"

கணவர் ;"என்னா சொன்னாங்க"

மனைவி ;"நீங்க தங்கமானவங்கலாம். ஆம்பளனா உங்கள போலதான் இருக்கனும்பாங்க"?

கணவர்; "ஏனாம்?

மனைவி;"மனைவி சொல்ல தட்டாம கேட்கிறீங்கனுதா."

கணவர்;" சொல்ல மறந்துட்டேன்.வயசான காலத்தில் பேச்சுத் துணைக்கு தெரிந்தவர்கள் யாரும் இல்லாமல் அம்மா எப்படி இருப்பாங்கனு யோசனையா இருந்தேன்"

மனைவி ; "பேச்சு துணைக்கு ஆள் கிடைச்சுட்டாங்களா?"

கணவர்; "கிடைச்சுட்டாங்க"

மனைவி ; "அப்படியா யாரு?"

கணவர் ;"உங்கம்மா.இப்பத்தான் உன் அண்ணன் வந்து உங்கம்மாவை சேர்த்துட்டு போனான்"

மனைவி : என்னது?பொண்டாட்டி பேச்சை கேட்டு பெத்த அம்மாவை அனாதை ஆஸ்ரமத்தில் சேர்க்கிறவன் எல்லாம் ஒரு ஆம்பளயா?"

உங்களுக்கு வந்தா ரத்தம்.. எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா.

இது ஒரு சாதாரண நகைச்சுவை பதிவு தான் இருந்தாலும் மிக பெரிய கருத்தை சொல்கிறது. மற்றவர்களுக்கு நாம் என்ன செய்ய நினைக்கிறோமோ அது தான் நமக்கு வந்து சேரும் என்பது தான்.
Loading...
tamizilnews. Powered by Blogger.