Face Upward - Widget

படிச்சுட்டு வயிறு வலிக்க சிரிக்க - டீச்சர் மாணவன் ஜோக் ..

Loading...
டீச்சர் : ஏன்டா... இன்னிக்கும் ஹோம் வொர்க் செய்யலையா?



மாணவன்: கரண்ட்டு இல்ல டீச்சர் ...

டீச்சர் : வெளக்கு, மெழுகு வர்த்தி ஏத்தி வச்சுக்கிட்டு செய்திருக்கலாம்ல?

மாணவன்: ஆமா டீச்சர்... முயற்சி பண்ணினேன்...
ஆனா தீப்பெட்டிய எடுக்க முடியலை...

டீச்சர் ;ஏன்டா...????

மாணவன்: அது பூஜை ரூமுல இருந்துச்சி...

டீச்சர் : உள்ள போயி எடுத்திருக்கலாம்ல?

மாணவன்: இல்ல டீச்சர்...
குளிக்கலல்ல... எப்பிடிப் போறது..?

டீச்சர் : குளிக்கலையா....ஏன்?

மாணவன்: மேல் தொட்டியில தண்ணியில்ல...

டீச்சர் : மோட்டார் போட்டு ஏத்த வேண்டியது தானடா?... சோம்பேறி...!! எரும

மாணவன்: டீச்சர் , லூசு மாதிரிப் பேசாதீங்க... சொன்னேன்ல கரண்டு இல்லன்னு...

டீச்சர்: ஏன்டா... அது சரி நானும் உன் ஏரியாவுல தான் குடியிருக்கன்... எங்க வீட்லலலாம் கரண்டே கட்டாகலியே... பொய்யா சொல்ட்ற..

மாணவன்:உண்ம தான் டீச்சர்... எங்க வீட்ல மட்டுந்தான் கரன்ட் இல்ல... கரண்ட் பில் கட்டலன்னு பீச புடிங்கிட்டாங்க...

டீச்சர்; கரண்ட் பில் கட்டக்கூடவா உங்கப்பாட்ட காசு இல்ல...

மாணவன்; ஈ.பி ஆபீசுல போயி பணம் கட்டியாச்சி... லைன் மேன் தான பீசு போடணும்... அவரு வரல...

டீச்சர்; ஏரியா லைன்மேன் போன் நம்பர வாங்கி வரசொல்ல வேண்டியது தான...

மாணவன்; வரச்சொல்லலாம் தான்... ஆனா முடில...

டீச்சர்;ஏன்... செல்லு ரீசார்ஜ் பண்ணலியா...

மாணவன்;அதுலாம் இருக்கு... செல்லுல சார்ஜ் தான் இல்ல...

டீச்சர்: அது ஏன்...

மாணவன்; டீச்சர் நீங்க லூசே தான்... அதான் மொதல்லயே சொன்னேன்ல... எங்க வீட்ல கரண்ட் இல்லன்னு...
Loading...
tamizilnews. Powered by Blogger.