Face Upward - Widget

வியக்க வைத்த ஒரு சாமானியனின் சமூக அக்கறை! - மனம் தொட்ட பதிவு

Loading...
வழக்கம் போல் இன்று ஒரு புதிய கடையில் இளநீர் குடித்தேன். அந்த வியாபாரியின் செய்கை எனக்கு வித்தியாசமாகவும் வியப்பாகவும் இருந்தது...
அவர் குடித்த இளநீர் கூடுகளை ரெண்டு துண்டாக வெட்டுவதற்கு பதிலாக நான்கு துண்டுகளாக வெட்டி வீசினார்...

இதை பார்த்ததும் ஏண்ணே எப்பவும் ரெண்டா பொளந்துதானே வீசுவீங்க! இப்ப
நான்கா போடறிங்க என்றேன்!

அது ஒண்ணுமில்ல தம்பி! வரபோறது மழைக்காலம் பாருங்க! ரெண்டா போட்டால் மழைத் தண்ணி சேர்ந்து அதுல கொசு நிறைய உற்பத்தி ஆகும்!

இப்பதான் கொசுவால் புதுசு புதுசா நோய் வருதாமே! அதனாலே இப்படி போட்டால் தேங்காய் மூடியில தண்ணி நிற்காது பாருங்க என்றார்.

ஒரு சாமானியனின் சமூகஅக்கறை என்னை வியக்க வைத்தது.. இவரை போலவே ஒவ்வொருவரும் வாழ்ந்தால் நம் நாட்டில் பல நோய்கள் உருவாக வாய்ப்பே இல்லாமல் போய்விடும். வாழ்க ஜனநாயகம்.

படித்ததில் வியந்தது. நீங்களும் படித்து வியந்தால் மறக்காமல் பகிருங்கள்.
Loading...
tamizilnews. Powered by Blogger.