Face Upward - Widget

முருங்கையை உண்மையில் வீட்டில் நட கூடாதா? இதோ உண்மை

Loading...

முருங்கையை நட்டவன் வெறுங்கையோட போவான் என்ற இந்த பழமொழிக்கு பலரும் தவறான அர்த்தம் புரிந்து கொண்டு பலர் வீடுகளில் முருங்கை மரத்தை நடுவதை தவிர்த்து விடுகிறார்கள்.

ஒருவர் முருங்கை மரத்தை அவருடைய வீட்டில் வளர்த்தால்.,முருங்கை மரத்தில் பட்டை, கீரை, காய், விதை, பிசின் அனைத்துமே பயன்படுகின்றன.

முருங்கைப் பட்டையை நீர் விட்டு அரைத்து வீக்கங்களுக்கும் வாயு தாங்கிய இடங்களுக்கும் போடுவது வழக்கம்.

முருங்கை இலையை உருவிய பின் காம்புகளை நறுக்கிப் போட்டு மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் உண்ண, கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கி சிறு நீரைப் பெருக்கும்.

முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்பு சத்து இவை இருக்கின்றன. இந்த இலைகளை நெய்யில் பொரித்துச் சாப்பிட்டால், ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப்படும். தோல் வியாதிகள் தீரும்.

முருங்கைப் பட்டை, உலோகச் சத்துக்கள் நிறைந்தது. உணவில் கலந்து விஷத்துக்கும் நரம்புக் கோளாறுக்கும் ஒரு நல்ல மருந்து.

முருங்கைக் காயை தென்னாட்டில் தான் அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். வட நாட்டில் இதை அதிகமாகச் சமைத்து உண்பதைக் காண்போம்.

கடுமையான ரத்த, சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் இந்த வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக் காய் கை கண்ட மருந்து. முருங்கைக் காயை வேகவைத்து கொஞ்சம் உப்பு சேர்த்துச் சாப்பிடலாம். இதை உண்டதும் ஒரு தம்ளர் எருமை மோர் சாப்பிடுவது சீரணத்துக்கு உதவி செய்கிறது.

முருங்கை மரத்தின் மருந்து சக்தியை அறிந்தோ அறியாமலோ நாம் அடிக்கடி முருங்கைக்காயை உணவாகக் கொள்கிறோம். முருங்கைக்காய் சாம்பார் பலருக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாயிற்றே!
 
இவ்வளவு பயனுள்ள இவற்றை தினமும் யார் உணவில் பயன்படுத்துகிறாரோ அவர் வயதானாலும் குச்சி ஊன்றாமல் வெறுங்கையோடு நடந்துசெல்வார்…,

இதைத்தான் நம் முன்னோர்கள் “முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்” என்று சொல்லி வைத்தார்கள்…,

ஆகவே., நாமும் பயனுள்ள முருங்கையை நட்டு வெறுங்கையோடு நடப்போமா…? படித்ததை அனைவருக்கும் பகிருங்கள்.
Loading...
tamizilnews. Powered by Blogger.