Face Upward - Widget

கேப்டன் மற்றும் மன்சூருக்குள் இருக்கும் ஈரம் - மனதை தொட்ட உண்மை பதிவு

Loading...

தோற்றமும், பேச்சும் கரடுமுரடாக இருந்தாலும், சில விமர்சனங்களுக்கு ஆட்பட்டாலும் மன்சூர் அலிகானும், கேப்டனும் தனிப்பிறவிகள். உச்ச நட்சத்திரங்கள் கூட எதை பேசுவது, எதை தவிர்ப்பது என்று உஷாராக மைக் முன்னே பஜனை பாடும்போது சினிமாவோ, அரசியலோ.. எதற்கும், எவருக்கும் அஞ்சாமல் கருத்து சொல்பவர் மன்சூர். 'கேப்டன் பிரபாகரன்' படத்தின் மூலம் கோடம்பாத்தை திரும்பி பார்க்க வைத்த சூப்பர் வில்லன். இன்றும் இவருக்கென ஒரு டிமாண்ட் உண்டு.

இது எதேச்சையாக பார்த்த வீடியோ. மகளின் திருமண வரவேற்பிற்கு வரும் கிங் காங்கை வரவேற்று அவருக்கு இணையாக முட்டிபோட்டு அமர்ந்து மகிழ்வித்து உரையாடுகிறார். பல வி.ஐ.பி.களுக்கு.. ஏன் நமக்கும் கூட இமேஜ் எனும் போலித்தனத்தை இதுபோன்று பொதுவெளியில் உதறிப்போடுவது இயல்பில் வந்து விடாது. கேமரா முன் நடித்தால் என்ன விளம்பரம் கிடைக்கும் என மனக்கணக்கு மட்டுமே போடும் மனக்குரங்கு.
ஆனால் இது மன்சூரின் அசல் உணர்வு.

இதே நிகழ்வில் கேப்டனும் கிங்காங்குடன் அன்புடன் பழகுகிறார். எத்தனை பெரிய ஸ்டார்களின் திருமண நிகழ்விற்கு சென்றிருந்தாலும் இப்படி ஒரு அன்பை கிங்காங் பெற்றிருக்க இயலாது. ஹாட்ஸ் ஆஃப் கேப்டன் & மன்சூர். 

-  Ag Sivakumar
Loading...
tamizilnews. Powered by Blogger.