Face Upward - Widget

ஆஸ்திரேலியாவில் டுபாகூர் பீல்டிங் 5 ரன் அபராதம்

Loading...
பீல்டிங் செய்வதுபோல் நடித்து பேட்ஸ்மேனை ஏமாற்றிய ஆஸ்திரேலிய வீரருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் புதிய விதிகளின்படி அபராதம் விதிக்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவில் நடந்து உள்ளூர் கிரிக்கெட் போட்டியில், எதிரணி பேட்ஸ்மேன்களின் கவனத்தை சிதறடிக்கும் வகையில் கையில் பந்து இல்லாத நிலையிலும் ஸ்டம்பை நோக்கி எறிந்து ரன் அவுட் செய்வது போல போலியாக பீல்டிங் செய்து நடித்தார் குயின்ஸ்லாந்து அணி வீரர் லபஸ்சாக்னி. 

 
சமீபத்தில் புதிதாக அறிமுகமாகி உள்ள ஐசிசி விதிகளின்படி இது தவறு என்பதால், இந்த செயலுக்கு அபராதமாக கிரிக்கெட் ஆஸி. லெவன் அணிக்கு 5 ரன்கள் கூடுதலாக வழங்கப்பட்டது.

இந்த விதிப்படி தண்டிக்கப்பட்ட முதல் வீரர் லபஸ்சாக்னி தான். இப்போட்டியில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் நிர்ணயித்த 280 ரன் இலக்கை குயின்ஸ்லாந்து எளிதாக விரட்டிப் பிடித்தது. 61 பந்தில் 62 ரன் விளாசி ஆட்ட நாயகன் விருதுபெற்ற லபஸ்சாக்னி தனது தவறுக்கு பிராயச்சித்தம் தேடிக் கொண்டார்.
Loading...
tamizilnews. Powered by Blogger.