Face Upward - Widget

முதல்ல நடிங்க.. அப்புறம் அரசியலுக்கு வாங்க..! – விஜய்க்கு கமல் அறிவுரை

Loading...
நடிகர் விஜய், முதலில் நல்ல படங்களை தேர்வு செய்து நடிக்கட்டும், அதன் பிறகு அரசியலுக்கு வருவது பற்றி யோசிக்கலாம் என்று நடிகர் கமல்ஹாசன் அறிவுரை தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியலில் நடிகர்கள் வருவது ஒன்றும் புதிதல்ல. அதே போல தமிழக அரசியலில் நடிகர்கள் இல்லாத ஒரு நிலைமை வருமா என்பதும் மிக பெரிய கேள்விகுறி.

தமிழக அரசியலில் நடிகர் கமல்ஹாசன் தீவிரமாக இறங்கி விட்டார் என்பது அனைவரும் அறிந்ததே. கட்சி, சின்னம், கொடி என அனைத்தையும் இறுதி செய்யும் பணிகளில் தற்போது அவர் ஈடுபட்டிருக்கிறார். 

 
இந்நிலையில், அனைத்து தொலைக்காட்சிகளுக்கும் அதிரடி பேட்டிகளை அளித்து வரும் கமல்ஹாசன், தற்பொழுது தமிழக அரசியல் தலைவர்களை கலங்கடித்து வருகிறார்.

பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த கமல் அவர்களிடம், நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் உங்களுக்குப் போட்டியாக இருப்பாரா? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் சொன்ன கமல்,

விஜய், முதலில் நல்ல கதையுள்ள படங்களைத் தேர்வு செய்து நடிக்கட்டும், அதன் பிறகு அரசியலுக்கு வருவது பற்றி யோசிக்கலாம் என்று நடிகர் விஜய்க்கு அறிவுரை வழங்கினார்.

மேலும், இதை தனிப்பட்ட முறையில் விஜயிடம் கூறினால், எனது அறிவுரையை அவர் உதாசினப்படுத்திவிடுவார் என்பதாலேயே; ஊடகங்களின் வாயிலாக சொல்கிறேன் என கமல்ஹாசன் பதிலளித்தார்.

நடிகர் விஜய் நேரடியாக அரசியலில் இன்னும் இறங்கவில்லை என்றாலும் எதிர்காலத்தில் அவர் தந்தையின் அறிவுரையில் அரசியலில் குதிக்க வாய்ப்புள்ளதாகவே கருதப்படுகிறது. நடிகர் கமல் அவர்களின் இந்த கருத்து விஜய் ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
Loading...
tamizilnews. Powered by Blogger.