Face Upward - Widget

பிக் பாஸ் போட்டியில் கவர்ச்சி உடை ஏன் அணிந்தார்கள்? உண்மையை உடைத்த வையாபுரி

Loading...
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி விரைவில் முடிவடைய இருக்கிறது. இதை நடிகர் கமல் ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார்.

கடந்த வாரம் சுஜா வெளியேறியதை அடுத்து இன்னும் சினேகன், கணேஷ், ஆரவ், பிந்து மற்றும் ஹரீஷ் ஆகியோர்களில் யார் வெற்றியாளராக அறிவிக்கப்படுவர் என ரசிகர்கள் ஆவலாக எதிர் பார்த்து காத்திருக்கிறார்கள். 

 
இந்நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் போட்டியில் இருந்து வெளியேறிய வையாபுரி தன்னுடைய பிக்பாஸ் அனுபவங்கள் குறித்து அவர் பேட்டி ஒன்றில் கூறியபோது, ‘பிக்பாஸ் நிகழ்ச்சியில் எதுவுமே சொல்லிக் கொடுத்து நடப்பதல்ல. காலை முதல் இரவு வரை அனைத்தும் உண்மையாக எதார்த்தமாக நடப்பவை’ என்று கூறினார்.

மேலும் பிக்பாஸ் பங்கேற்பாளர்கள் ஒருசிலரின் கவர்ச்சி உடைக்கும் பிக்பாஸுக்கும் சம்பந்தமில்லை. போட்டியாளர்கள் அனைவரும் அவரவர் வீட்டில் இருந்து எடுத்து வந்த உடைகளையே அணிந்தனர். மேலும் அவரவர் வீட்டில் எவ்வாறு இருந்தார்களோ அதேபோல்தான் பிக்பாஸ் வீட்டிலும் இருந்தனர்’ என்று கூறினார்.

இதன் மூலம் பலரது கேள்விக்கு பதில் கிடைத்திருக்கிறது. இது தொடர்பான உங்களுடைய கருத்துகளையும் மறக்காமல் கமெண்ட் பண்ணுங்க.
Loading...
tamizilnews. Powered by Blogger.