Face Upward - Widget

மனைவி, மகள்களை அடிக்கலாமாம்! ஆப்கானில் அராஜக சட்டம்! |Wife, daughters can beat anyone! Afghan anarchist-law!

Loading...

குடும்ப கவுரவம் என்ற பெயரில் உலகம் முழுதும் பெண்களை துன்புறுத்துவது என்ற காட்டுமிராண்டித் தனம் பெருகிவிட்ட சூழ்நிலையில் ஆப்கானிஸ்தானில் மனைவியை, மகளை குடும்பத் தலைவன் அடிக்கலாம் என்று ஆப்கானிஸ்தானில் புதிய சட்டம் நிறைவேற்றபட்டுள்ளது.


ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்தில் புதிய சட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. அதில் வீட்டு கவுரவத்தை காப்பாற்றும் வகையில் மனைவி மற்றும் மகள்களை ஆண்கள் அடித்தால் அது தவறு அல்ல.


இதுபோன்ற குற்றங்களில் வழக்கு தொடர்ந்தாலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் கோர்ட்டுக்கு வரவேண்டியதில்லை என்று கூறப்பட்டுள்ளது.


இந்த சட்டம் அதிபர் ஹமீது ஹர்சாய் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. புதிய சட்டத்துக்கு மனித உரிமை அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் கவுரவ கொலைகள் என்ற பெயரில் பெண்களை கொல்வது அதிகமாக நடந்துவருகிற நேரத்தில் இதுபோன்ற சட்டம் கொண்டுவந்திருப்பது பெண்களை மிகவும் பாதிக்கும்.


இதன் மூலம் பெண்கள் உரிமைகள் முற்றிலும் மறுக்கப்பட்டுள்ளன என்று அவர்கள் கூறியுள்ளனர்
Loading...
tamizilnews. Powered by Blogger.