Face Upward - Widget

ஒழுங்கான கையெழுத்தில் மருந்துச்சீட்டு - சட்டம் வருகிறது | Regular handwriting prescription - becoming law

Loading...

மருத்துவர்கள் எழுதித் தரும் மருந்துச் சீட்டுக்களில் என்ன எழுதியுள்ளது என்று அனைவருக்கும் புரியும் வகையில் சட்டம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


நன்றாகப் படித்தவர்கள்தான் மருத்துவர்களாக முடியும் என்றாலும் அவர்கள் எழுதித் தரும் பிரிஸ்கிரிப்ஷன் எனப்படும் மருந்துச் சீட்டுக்களில் உள்ள எழுத்துக்கள் சாதாரண மக்களுக்குப் பெரும்பாலும் புரிவதில்லை.


அதற்கு நோயாளிகள், தங்களது இஷ்டத்திற்கு மருந்துகளை வாங்கிச் சாப்பிட்டு விடக்கூடாது என்பதுதான் காரணம் என்று சொல்லப்படுகிறது. ஆனால், சில நேரங்களில் மருந்துக் கடைகளிலே கூட மருத்துவர்கள் எழுதித் தரும் சீட்டுகள் புரியாமல் போய் விடுகிறது. இதையடுத்து அனைவருக்கும் புரியும் வகையில் பெரிய எழுத்துக்களில் மருத்துவர்கள் எழுதித்தரும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் இருந்த வந்தன.


இதன்படி தற்போது ஒரு வரைவு நகலை மத்திய அரசு தயாரித்துள்ளது. அதற்கு இந்திய மருத்துவக் கவுன்சிலும் ஒப்புதல் அளித்து விட்டது. தற்போது, இந்த அறிவிக்கை மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.


இதற்கு அமைச்சகம் அனுமதி அளித்த பிறகு, மருந்து சீட்டுகளை பெரிய எழுத்துகளில் எழுதும் சட்டம் நாடு முழுவதும் விரைவில் அமலுக்கு வரும். ஆனால் இந்த சட்டத்திற்கு மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். “இப்படி பெரிய பெரிய எழுத்துக்களில் உட்கார்ந்து நிதானமாக எழுதினால் நோயாளிகளை அதிக அளவில் பார்க்க முடியாது, தேவையில்லாத தாமதம் ஏற்படும்” என்று வாதிடுகிறார்கள்.
Loading...
tamizilnews. Powered by Blogger.