Face Upward - Widget

கட்டப்பஞ்சாயத்து பயங்கரம்! தம்பதியர் அடித்துக்கொலை! | Kattapanchayat scary! couple killed by beating!

Loading...



நாட்டில் கட்ட பஞ்சாயத்துகளின் தீர்ப்பு என்ற பெயரில் நடக்கும் கொடுமைகள் பெருகி வருகின்றன. மேற்குவங்க பஞ்சாயத்தில் பெண்ணைக் கற்பழிக்க கொடுக்கப்பட்ட தீர்ப்பினால் நாடே பற்றிக்கொண்டு எரியும் தருணத்தில் ஜார்கண்ட் மாநிலத்தில் நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சம்பவம் நடந்துள்ளது.


இதற்கான சமீபத்திய எடுத்துக்காட்டாக, பேய் பிடித்திருப்பதாக குற்றம்சாட்டி பவன் காடியா(45), அவரது மனைவி முனி(42) ஆகியோரை அடித்து கொல்லும்படி கட்டப் பஞ்சாயத்தினர் தீர்ப்பளித்தனர்.


இதனையடுத்து, அந்த தம்பதியர் கடந்த ஜனவரி மாதம் 9-ம் தேதி ஊர் மக்களால் கல்லால் அடித்து கொல்லப்பட்டனர். இதேபோல் ஜனவரி 6-ம் தேதி புட்டேல் தேவி என்ற பெண்ணும் மர்மமான முறையில் அடித்துக் கொல்லப்பட்டு பிணமாக கிடந்தார்.


இதிலும் ஆத்திரம் தணியாத கட்டப் பஞ்சாயத்தினர், பவன் காடியா தம்பதியரின் மகள் குமாரி மற்றும் அவரது குடும்பத்தை ‘ஊரை விட்டு விலக்கி வைத்து’ கடந்த வாரம் தீர்ப்பளித்தனர். உள்ளூர் மக்கள் யாரும் அவர்களுடன் எத்தகைய தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனவும் உத்தரவிட்டனர்.


இந்த சமூகக் கொடுமை தொடர்பாக, சடார் போலீஸ் நிலையத்தில் குமாரி புகார் அளித்துள்ளார்.


இவ்விவகாரம், உள்ளூர் ஊடங்களின் வழியாக கசிந்ததன் விளைவாக ‘இந்த கொடுங்குற்றத்தில் ஈடுபட்ட பஞ்சாயத்தார் மீது மூட நம்பிக்கைகள் தொடர்பான பழக்க வழக்கங்கள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்கப்படும் என ஜார்கண்ட் மாநில சமூக நலம், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மந்திரி உறுதியளித்துள்ளார்.


கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் மூட நம்பிக்கையின் அடிப்படையில் 5 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட பெண்கள் இதுபோன்ற வகையில் அநியாயமாக கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்துமதத்தின் புனிதங்களை பேசும் நம் நாட்டின் மதவாத சக்திகள் மூட நம்பிக்கைகளை ஒழிக்க என்ன செய்கிறது?
Loading...
tamizilnews. Powered by Blogger.