கௌதம் கார்த்திக்கின் அடுத்த ரிலீஸ் - தேதி அறிவிப்பு | Gautham Karthik's next release - Date Announcement
Loading...
கௌதம் கார்த்திக்கின் முதல் படம் கடல் தோல்வி. கடல் முழுக்க மணிரத்னத்தின் ஆதிக்கம். கௌதம் கார்த்திக்கின் நடிப்பு, திறமையெல்லாம் எப்படி என்பதை அறிய இன்னொரு படம் இதுவரை வெளியாகவில்லை. வை ராஜா வை, என்னமோ ஏதோ, சிப்பாய் என அவரும் பல படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். ஆனால் எந்தப் படம் முதலில்...?
அதற்கு விடை கிடைத்திருக்கிறது. என்னமோ ஏதோ படம்தான் முதலில் வெளியாகிறது.
தெலுங்கில் நானி, நித்யா மேனன் நடித்த படத்தின் தழுவல்தான் இந்த என்னமோ ஏதோ. அட்டகாசமான ரொமாண்டிக் காமெடி. ரவி தியாகராஜன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தை ரவி பிரசாத் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. டி.இமான் இசை. கௌதம் கார்த்திக் ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார்.
படத்தின் ப்ளஸ் பாடல்கள். டி.இமானின் இசையில் அனிருத் அப்பாடக்கர் எனத் தொடங்கும் ஒரு பாடலை பாடியுள்ளார். ஸ்ருதியும் இந்தப் படத்தில் பாடியுள்ளார். அவரின் பாடல் வரிகள் ஷட் அப் யுவர் மவுத் என்று மரியாதையாக ஆரம்பிக்கின்றன. படத்தின் பாடல்கள் ஏற்கனவே பரவலான கவனிப்பை பெற்றிருப்பது கூடுதல் பலம்.
மார்ச் 28 ஆம் தேதி நெடுஞ்சாலை வெளியாகும் அதேநாள் இந்தப் படமும் வெளியாகிறது.
Loading...