Face Upward - Widget

ஐபிஎல். சூதாட்ட அறிக்கையின் 6 அதிர்ச்சிகர அம்சங்கள்! | IPL. 6 shocked aspects of the gambling!

Loading...


6வது ஐபிஎல். கிரிக்கெட்டில் நடைபெற்ற ஸ்பாட் பிக்சிங் உள்ளிட்ட பல்வேறு சூதாட்டங்கள் தொடர்பான நீதிபதி முட்கல் அறிக்கை நேற்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஒரு 6 விஷயங்கள் உண்மையில் குழப்பமும், அதிர்ச்சியையும் ஏற்படுத்துபவை.


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் யார் என்று விசாரணை நீதிபதி கேட்டபோது தத்து பித்தென்ற பதிலே கிடைத்துள்ளது. அணியின் உரிமையாளர் யார் என்று உறுதியாக கூற முடியாத அளவுக்குத்தான் அனைத்தும் நடந்துள்ளது ஒரு அணியை வழிநடத்துபவர் யார் என்ற கேள்விக்கு முரணான பதில்களே கிடைத்துள்ளது. அணி உரிமையாளர் ஒப்பந்தத்திலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் யார் என்ற விவரம் முரண் தன்மையுடன் இருந்துள்ளது. அணியின் உரிமையாளர் யார் என்பதே தெரியாமலேயே அணிகள் உள்ளன. ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளது.


குருநாத் மெய்யப்பனின் ரோல்: விசாரணைக் கமிஷன் முன் ஆஜரான இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன பிரதிநிதிகள் இந்தியா சிமெண்ட்ஸில் குருநாத் மெய்யப்பனுக்கு பங்கு கிடையாது எனவே அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளர் என்று கூற முடியாது என்று கூறியுள்ளனர். கேப்டன் தோனி, ஸ்ரீனிவாசன் அனைவருமே குருநாத் மெய்யப்பனுக்கு எந்த ஒ ரோலும் இல்லை வெறும் கிரிக்கெட் ஆரவலர் மட்டுமே என்று தெரிவித்துள்ளனர்.


குந்ராவின் ஜோக்:


சூதாட்டத்தில் ஈடுபட்ட மற்றொரு அணியின் உரிமையாளர் ராஜ் குந்ரா பிரிட்டன் குடிமகன் என்பதால் இந்தியாவிலும் சூதாட்டம் சட்டபூர்வமானது என்று நினைத்தாராம். இதனை கூறியது டெல்லி போலீஸ். சட்டம் தெரியாதது மன்னிப்புக்கு போதுமானது அல்ல என்று தெரியாத அளவுக்கு பாமரனா ஒரு அணியின் உரிமையாளர் நம்ப முடியவில்லை.


குந்ராவின் நண்பர் கோயென்க்கா குந்ராவுக்கு சூதாட்டப் பழக்கம் உண்டு என்று கூறியது குறித்து குந்ராவிடம் விசாரணையில் கேட்டபோது கோயென்கா கூறினால் சரியாகத்தான் இருக்கும் என்று கேலியாக பதில் கூறியுள்ளார். பின்பு அந்த கூற்றை திரும்ப்ப்பெற்றுக் கொண்டாராம்.


கிரிக்கெட் கமிட்டியில் யாருக்கு விவரம் தெரியும்?:


பிசிசிஐ-யின் ஊழல் எதிர்ப்பு கமிட்டியின் விசாரணை எல்லை விஸ்தீரணமானது. ஐ.சி.சியின் ஊழல் எதிர்ப்பு கமிட்டியின் ஒய்.பி.சிங், என்.எஸ். விர்க் என்பவருக்கு சூதாட்ட முழு விவரம் தெரியும் என்று கமிட்டியிடம் கூறியுள்ளாஅர். விர்க்கிடம் கேட்டப்போது ஒய்.பி.சிங்கிடம்தான் உள்ளது என்று ஃபுட்பால் ஆடியுள்ளனர்.


குருநாத் மெய்யப்பன் விவகாரம்: குருநாத் மெய்யப்பன் வெறும் கிரிக்கெட் ஆர்வலர் மட்டுமே என்று ஸ்ரீனிவாசனும் கேப்டன் தோனியும் கூறினாலும் இந்திய சிமெண்ட்ஸ் நிர்வாகமே ஐபிஎல். கிரிக்கெட்டின் 6 சீசன்களிலும் குருநாத் மெய்யப்பனுக்கு அதிகார அந்தஸ்து கேட்டு விண்ணப்பித்துள்ளது அணியின் உரிமையாளர் என்ற முறையில். உரிமையாளர் அல்லது மேலாளர் என்று பல்வேறு விதமாக அவருக்கு அதிகார அந்தஸ்து கேட்டுள்ளது இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம்.
Loading...
tamizilnews. Powered by Blogger.