Face Upward - Widget

பாலியல் வன்முறைகளுக்கு பெண்களே காரணம்! | The reason for sexual violence is women!

Loading...


பாலியல் வன்முறைகளுக்குப் பெண்களே காரணம் என்று அரசியல் தலைவியும், மகாராஷ்ட்ர மாநில மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் ஆஷா மிர்ஜே ஒரு கூட்டத்தில் பேசியுள்ளார்.


தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி கூட்டம் ஒன்று மகாராஷ்ட்ராவில் உள்ள நாகபுரியில் நேற்று நடந்தது. அதில் அக்கட்சியின் தலைவரும், மகாராஷ்ட்ர மாநில மகளிர் ஆணையத்தின் உறுப்பினருமான ஆஷா மிர்ஜே கலந்து கொண்டு பேசினார்.


அப்போது டெல்லியில் 2012 டிசம்பர் மாதம் நடந்த பாலியல் வன்முறையைச் சுட்டிக் காட்டி அவர் பேசினார். நள்ளிரவில் தனது ஆண் தோழருடன் அந்தப் பெண் செல்ல வேண்டிய அவசியம் என்ன என்று வினவிய அவர், மும்பையில் சென்ற ஆண்டு பெண் பத்திரிகையாளர் மீது நடந்த தாக்குதல் குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.


“தனிமையான இடத்திற்கு பெண் பத்திரிகையாளர் ஆறு மணிக்கு மேல் செல்ல வேண்டிய அவசியம் என்ன?” என்று கேட்ட அவர், பெண்களின் நடத்தை, தோற்றம், தேவையற்ற இடங்களுக்கு வருவது ஆகியவையும் பெண்கள் மீதான வன்முறைக்கு காரணம் என்றார் அவர்.


இவற்றை பெண்கள் பரிசீலிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார் அவர்.


தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரின் மகளும், கட்சியின் மகளிர் அணி தலைவியுமான சுப்ரியா சுலேவும், ஆஷா மிர்ஜே இவ்வாறு பேசும் போது மேடையில் அமர்ந்திருந்தார்.


மகளிர் ஆணையத்தின் ஒரு உறுப்பினரே இவ்வாறு பேசியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
Loading...
tamizilnews. Powered by Blogger.