Face Upward - Widget

'கோலியின் பேட்டிங் வேறு வகையான கிளாஸ்' | 'Batting different kind of Kohli Class'

Loading...



இந்தியாவின் புதிய பேட்டிங் நட்சத்திரம் விராட் கோலியின் பேட்டிங் அணுகுமுறை தைரியமானது, எப்போதும் ரன்கள் எடுப்பதில் கவனம் செலுத்தும் அவர் தற்போது ஒரு ஸ்டார் பேட்ஸ்மென் என்று ஆஸ்ட்ரேலிய முன்னாள் கேப்டனும் தற்போதைய கிரிக்கெட் பண்டிதருமான இயன் சாப்பல் சான்றிதழ் வழங்கியுள்ளார்.


இது குறித்து பிரபல கிரிக்கெட் இணையதளத்தில் எழுதியுள்ள பத்தியில் கூறியிருப்பதாவது:


விராட் கோலி தற்போது சான்றிதழ் வழங்கப்பட்ட சர்வதேச நட்சத்திரம், எதிர்கால கேப்டனுக்குரிய அனைத்துத் தகுதிகளுடன் அவர் தற்போது சச்சின் டெண்டுல்கரின் 4ஆம் இடத்தைப்பிடித்து ஆடி வருகிறார்.


உள்ளூர் பேட்ஸ்மென்களே திக்கித் திணறும் பெர்த் பிட்சில் விராட் கோலி தன்னை நிருபித்தார் அவர் 44 மற்றும் 75 ரன்களை எடுத்தார். அதன் பிறகே அவர் சர்வதேச பேட்ஸ்மென் என்ற தனது தரநிலையிலிருந்து கீழே இறங்கவில்லை.


பெர்த்தில் துவங்கி அடிலெய்டில் சதம் எடுத்தார். அதன் பிறகு 4 சதங்களை அவர் எடுத்துவிட்டார் ஒன்று பெங்களூர் மற்றும் தற்போது தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்கில் ஒரு அபார சதம்.


எந்த ஒரு சர்வதேச பேட்ஸ்மெனின் பயோ டேட்டாவிலும் பெர்த் மற்றும் வாண்டரர்ஸ் சதம் முக்கியமானது.


பெர்த் பிட்சில் தனது திறமையை காண்பித்த விராட் கோலி, உலகின் முதல் தர தென் ஆப்பிரிக்க பந்து வீச்சிற்கு எதிராக முதல்நாள் வாண்டரர்ஸ் பிட்சில் சதம் எடுத்தது தன்னை அவர் ஒரு வேறு விதமான தர நிலையில் உள்ள டெஸ்ட் வீரர் என்பதை அறிவித்துகொண்டதாக அமைந்தது.


அவர் பேட்டிங்கில் தைரியமான அணுகுமுறை கோன்டவர். அன்று கூட நியூசீலாந்துக்கு எதிராக சதம் எடுத்துவிட்டு 'பவுன்சரை விடுவது ஒன்றுமில்லை, அதனை அடிப்பதுதான் முக்கியம்' என்றார். கிரிக்கெட் என்ற மன விளையாட்டு உத்திகளில் கோலி பெரும் பகுதியை சரியாக பிடித்துவிட்டார்.




நல்ல பலமான மன நிலைகொண்ட அருமையான பேட்டிங் வீரர் கோலி.


இவ்வாறு கூறியுள்ளார் இயன் சாப்பல்.
Loading...
tamizilnews. Powered by Blogger.