Face Upward - Widget

'பெண் வழக்கறிஞர் தெரிவித்த பாலியல் புகார் பொய்யானவை' | 'The woman said the sexual harassment lawyer false' |

Loading...


ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெண் வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய மூன்று உச்சநீதிமன்ற நீதிபதிகளை கொண்ட குழு அளித்துள்ள அறிக்கையில் ஏ.கே. கங்குலி மீது குற்றம் சாற்றப்பட்டுள்ளது.


பெண் வழக்கறிஞர் ஒருவர் அவரது வலைபதிவிலும், இணையதளம் ஒன்றிற்கு அளித்த பேட்டியிலும் பயிற்சிக்காக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவரிடம் சேர்ந்ததாகவும் அப்போது அந்த நீதிபதி அவருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி அறிக்கையை அளிக்க தலைமை நீதிபதி சதாசிவம் ஆர்.எம் லோதா, எச்.எல், தத்து, ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆகியோர் கொண்ட குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டார்.


இதனையடுத்து பெண் வழக்கறிஞர் மற்றும் புகாருக்குள்ளான ஓய்வுபெற்ற நீதிபதியிடம் விசாரணை குழுவினர் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது 7 முறை பெண் வழக்கறிஞரையும், ஓய்வுபெற்ற நீதிபதியையும் சந்தித்து அவர்களிடமிருந்து வாக்குமூலத்தை பெற்று அதன் அறிக்கையை தலைமை நீதிபதியிடம் தாக்கல் செய்தனர். விசாரணையில் பெண் வழக்கறிஞர் குற்றம் சாட்டியது முன்னாள் நீதிபதி ஏ.கே.கங்குலி என்பது தெரியவந்துள்ளது.


தன்மீது குற்றம் சாற்றப்பட்டுள்ளது குறித்து செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் ஏ.கே.கங்குலி, 'என்னுடைய வாழ்வில் பல்வேறு பயிற்சி வழக்கறிஞர்களுடன் பணியாற்றியுள்ளேன். இது போன்ற குற்றச்சாட்டுகள் யாரும் தெரிவிக்கவில்லை. தற்போது பெண் பயிற்சி வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டும் பொய்யானவையே என விசாரணை குழுவிடம் கூறியுள்ளேன். இது போன்ற புகார்கள் நீதிபதிகளின் மேல் சுமத்தப்படும் பட்சத்தில் நீதி துறையில் பாதிப்பு ஏற்படும்' என தெரிவி்த்தார்.
Loading...
tamizilnews. Powered by Blogger.