Face Upward - Widget

பாராளுமன்ற தேர்தலுக்கு விருப்பமனு அளிக்கலாம் - ஜெ. | Wish to submit a petition for parliamentary elections - J.J

Loading...


2014ஆம் ஆண்டில் நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் டிசம்பர் 19ம் தேதி முதல் 27ம் தேதி வரை தலைமைக் கழகத்தில் வேட்பு மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என்று முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.


காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் 5 ஆண்டு பதவி காலம் அடுத்த ஆண்டு (2014) மே மாதம் முடிவடைகிறது. இதையடுத்து பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்த தலைமை தேர்தல் ஆணையம் ஏற்பாடுகள் செய்து வருகிறது.


பாராளுமன்றத்துக்கு மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் தேர்தல் நடைபெறும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. தேர்தல் அட்டவணை அடுத்த மாத இறுதியில் வெளியிடப்படும் என்று தெரிகிறது.


பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெற இன்னும் 4 மாதங்களே உள்ளதால் அனைத்துக் கட்சிகளும் தேர்தலை எதிர் கொள்ள தயாராகி வருகின்றன. வேட்பாளர் தேர்வு, பிரசாரம் உள்ளிட்ட பணிகள் தொடர்பாக முக்கிய கட்சிகள் ஆலோசனை நடத்தி வருகின்றன. இதனால் பாராளுமன்ற தேர்தல் சுறுசுறுப்பு பெற தொடங்கியுள்ளது.


இந்த நிலையில் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா, பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடமிருந்து விண்ணப்பம் பெற முடிவு செய்துள்ளார்.


இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு உட்பட்ட 40 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் அதிமுக சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள் தலைமைக் கழகத்தில் வருகிற 19.12.2013 வியாழக்கிழமை முதல் 27.12.2013 வெள்ளிக்கிழமை வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை உரிய கட்டணத் தொகையைச் செலுத்தி அதற்கான விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதலமைச்சர் ஜெயலலிதா கூறி உள்ளார்.


அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ. 25 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாக அதிமுக பொருளாளரும், அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில், அதிமுக பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதாவின் அறிவிப்பிற்கு இணங்க தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு உட்பட்ட 40 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள் தலைமைக் கழகத்தில் வருகிற 19.12.2013 முதல் 27.12.2013 வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை விண்ணப்பக் கட்டணமாக 25 ஆயிரம் ரூபாய் செலுத்தி வேட்புமனுக்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
Loading...
tamizilnews. Powered by Blogger.