Face Upward - Widget

பொதுமக்கள் அனைவரும் வருக - கெஜ்ரிவால் அழைப்பு | Welcome everyone to the public - call Kejriwal

Loading...

டெல்லி முதலமைச்சராக வரும் 28 ஆம் தேதி சனிக்கிழமை பதவியேற்கும் ஆம் ஆத்மி கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், பதவி ஏற்பு விழாவிற்கு அனைத்து பொதுமக்களையும் அழைத்துள்ளார் மேலும் பதவி ஏற்று 24 மணி நேரத்திற்குள் 700லிட்டர் தண்ணீரை இலவசமாக வழங்கும் திட்டத்தை நடைமுறைபடுத்த இருப்பதாக தெரிவித்துள்ளார். 

ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வரும் சனிக்கிழமை 28 ஆம் தேதி டெல்லியில் முதலமைச்சராக பதவியேற்கிறார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் நண்பகல் 12 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது.

ஆட்சியமைப்பது பற்றிய துணைநிலை ஆளுநரின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். டெல்லி தலைமை செயலாளர் கெஜ்ரிவாலை சந்தித்து ஒப்புதல் பற்றி தெரிவித்தார். இதனைத் தொடர்ந்தே பதவியேற்பு குறித்து முடிவாகி உள்ளது.


இதனிடையே காங்கிரஸ் உடன் கூட்டணியோ, உடன்பாடோ இல்லை என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. மக்களுக்கு அளித்த 18 வாக்குறுதிகளை சட்டசபையில் நிறைவேற்ற ஆதரவு கிடைக்கும் என..


அக்கட்சி நிர்வாகி யோகேந்திர யாதவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆதரவு கிடைக்கவில்லை என்றால் வெளிறே தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக காங்கிரஸ் ஆதரவுடன் டெல்லியில் ஆட்சி அமைக்க முன்வந்துள்ள ஆம் ஆத்மி கட்சி அரசு 26 ஆம் தேதி பதவியேற்கும என அறிவித்திருந்தது.


இதனையடுத்து அமைச்சர்களும் அறிவிக்கப்பட்டனர். காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்து விசாரிக்கப்படும் என கெஜ்ரிவால் கட்சி அறிவித்ததை அடுத்து டெல்லி அரசியலில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. 


இந்நிலையில், எப்போதும் நடப்பது போல முதலமைச்சராக பதவியேற்கும் விழாவில் வெறும் அரசியல் பிரமுகர்கள் மட்டும் இல்லாமல் அனைத்து பொது மக்களுக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார்.


மேலும், பதவி ஏற்று 24 மணி நேரத்திற்குள் 700லிட்டர் தண்ணீரை இலவசமாக வழங்கும் திட்டத்தை நடைமுறைபடுத்த இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Loading...
tamizilnews. Powered by Blogger.