Face Upward - Widget

இரண்டு மனைவி - ஒரே கணவன்; இணைந்து வாழ சம்மதம்! | Two wives - one husband, to live alongside her consent!

Loading...



ஒரே கணவருக்கு சண்டை போட்ட டிவி நடிகை மற்றும் அந்தமான் பெண் சமாதானம் அடைந்தனர். இருவரும் சேர்ந்து ஒரே கணவருடன் ஒருங்கிணைந்து வாழ போவதாக காவல்துறையினரிடம் சம்மதம் தெரிவித்தனர்.


சிவகங்கை அருகே உள்ள மானாமதுரையை சேர்ந்தவர் செல்வராணி. இவர் அந்தமானில் தங்கி இருக்கிறார். இவர் கடந்த 25 ஆம் தேதி அந்தமானில் இருந்து வந்து கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில், தனது கணவர் பூமிநாதனை (ஆட்டோ டிரைவர்) டிவி நடிகை பிந்தியா ராணி தனது கட்டுப்பட்டில் வைத்துள்ளதாகவும், அதனால் தனது கணவரை மீட்டு தரும் படியாகவும் குறிப்பிட்டிருந்தார். பூமிநாதனுடன் இணைந்து இருக்கும் போட்டோவையும் அவர் வெளியிட்டார்.


இந்நிலையில் இந்த பிரச்சனை தொடர்பாக தொலைக்காட்சி நடிகை பிந்தியா ராணி, பூமிநாதன் எனது கணவர் தான். 13 ஆண்டுகளாக அவருடன் வாழ்ந்து வருவதாகவும், எனக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர் என்று தெரிந்து தான் என்னை பூமிநாதன் திருமணம் செய்து கொண்டார். அதே நேரத்தில் செல்வராணி ஏற்கனவே திருமணமானவர். உறவுக்காரர் என்று அந்தமானுக்கு அவரை பார்க்க சென்ற நேரத்தில் வலுகட்டாயமாக எனது கணவரை செல்வராணிக்கு திருமணம் செய்து வைத்து விட்டனர். அதனால் அவரை என்னால் விட்டு கொடுக்க முடியாது என்று கூறியிருந்தார்.


பிந்தியாவின் பேட்டியால் ஆத்திரம் அடைந்த செல்வராணி நேற்றும் முன்தினம் மீண்டும் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து புகார் கொடுத்து பேட்டியளித்தார். இதில் செல்வராணி கூறும்போது, பிந்தியா ராணி எனது கணவரை என்னை விட்டு பிரிக்க நினைக்கிறார். பூமிநாதன் எனக்கு மட்டும் தான் சொந்தம் என்று கூறினார்.


பூமி நாதன் என்னை தான் திருமணம் செய்து கொண்டார். அவரால் தற்பொழுது நான் கர்ப்பமாக இருக்கிறேன். இதில் என்னிடம் உண்மை இருப்பதால் தான் நான் இங்கு வந்து நின்று நியாயம் கேட்கிறேன். ஆனால் பிந்தியா ஒளிந்து இருந்து கொண்டு பேட்டி கொடுக்கிறார். அவர்களிடம் உண்மை இருக்கும் என்றால் நேரில் வந்து பதில் சொல்லட்டும் என்று கூறினார். இதனை அடுத்து போலீசார் அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.


இதன் பின் பிந்தியா ராணி, பூமிநாதன், செல்வராணி ஆகிய 3 பேரும் நேற்று முன்தினம் பகல் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.


இதையடுத்து 3 பேரும் சிட்லபாக்கம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது செல்வராணி கூறும்போது, என்னுடைய வயிற்றில் வளரும் குழந்தை பூமிநாதனுடையது. அவர் என்னை ஏமாற்றி கர்ப்பமாக்கி விட்டார். அதனால் பூமிநாதன் மீது வழக்கு போடுங்கள் என்று கூறினார்.


இதனால் நெடு நேரம் ஆகியும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. மாலையில் மீண்டும் போலீசார் சமரச முயற்சியில் ஈடுபட்டனர். பூமிநாதன் சிறைசெல்ல நேரும் என எச்சரித்ததும் அவரை காப்பாற்றும் முயற்சியில் செல்வராணியும், பிந்தியாவும் இறங்கினர். கணவன் சிறைசெல்லக்கூடாது என்ற முடிவில் இருவரும் உறுதியாக இருந்தனர்.


இதன் காரணமாக நேற்று முன்தினம் இரவு செல்வராணி ‘கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்’ என்ற வரிகளுக்கு ஏற்ப தனது மனதை மாற்றிக்கொண்டார். இதனால் பிந்தியாவும் தனது மனதை மாற்றிக்கொண்டார். நாங்கள் இருவரும் பூமிநாதனுக்கு மனைவியாக ஒருங்கிணைந்து வாழ சம்மதிக்கிறோம் என தெரிவித்தனர்.


இதுதொடர்பாக செல்வராணி காவல்துறையினரிடம் கூறுகையில், நான் பிந்தியா ராணியுடன் இணக்கமாக வாழ்வேன். இனி பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்பு இல்லை என்றார். இதே போல பிந்தியா கூறும்போது, செல்வராணி எனது கணவருக்கு 2-வது மனைவியாக வாழ சம்மதிக்கிறேன்.


இத்துடன் எங்களது வழக்கை முடித்துக்கொள்கிறோம். இனி எங்களுக்குள் எந்த குழப்பமும் வராது என காவல் நிலையத்தில் தெரிவித்தனர்.
Loading...
tamizilnews. Powered by Blogger.