Face Upward - Widget

உறுதியானது சூர்யா, வெங்கட்பிரபு படம் | Surya stable, Venkatprabhu Image

Loading...

வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. படத்தை சூர்யாவின் டி2 என்டர்டெய்ன்மெண்டுக்குப் பதில் ஸ்டுடியோ கி‌ரினே தயா‌ரிக்கிறது.


பி‌ரியாணிக்குப் பிறகு புதுமுகங்களை வைத்து மினிமம் பட்ஜெட்டில் ஒரு படத்தை இயக்குவதாக வெங்கட்பிரபு சொல்லி வந்தார். இந்நிலையில் அவர் சொன்ன ஒன்லைன் பிடித்துப் போக அதனை டெவலப் செய்ய சொன்னார் சூர்யா. வெங்கட்பிரபும் அதற்கு ஒத்துக் கொண்டார். சூர்யாவின் டி2 என்டர்டெய்ன்மெண்ட் இந்தப் படத்தை தயா‌ரிக்கும் எனவும் கூறப்பட்டது.


வெறும் யூகமாக இருந்த சூர்யா, வெங்கட்பிரபு புராஜெக்ட் இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் படத்தை தயா‌ரிப்பது ஸ்டுடியோ கி‌‌ரீன். இதற்குப் பின்னால் வேறொரு கதை உள்ளது.


வெங்கட்பிரபு இரண்டு படங்கள் ஸ்டுடியோ கி‌‌ரீனுக்கு இயக்கித் தருவதாக ஒப்பந்தம் போட்டிருக்கிறார். பி‌ரியாணி முடிந்த நிலையில் அவரால் வேறு கம்பெனியை தேடிப்போக முடியாமல் இருந்தது இந்த ஒப்பந்தத்தினால்தான் என்கிறார்கள். எப்படியும் ஸ்டுடியோ கி‌‌ரீனுக்கு படம் இயக்கித்தர வேண்டும் என்பதாலேயே தனது புதுமுகங்கள் புராஜெக்டை புறம்தள்ளி சூர்யாவுக்கு கதை சொல்லியிருக்கிறார்.


படம் குறித்த பிற விவரங்களை விரைவில் அறிவிப்பார்கள் என தெ‌ரிகிறது.
Loading...
tamizilnews. Powered by Blogger.