மதுகுடிக்க ரத்தத்தை விற்பனை செய்யும் மாணவர்கள் | Students who sell blood to drink alcohol
Loading...
தஞ்சையில் மதுகுடிக்கும் பழக்கம் மாணவர்களிடம் பரவி வருகிறது. படிக்க பள்ளி-கல்லூரி செல்லும் மாணவர்கள் சிலர் தவறான பழக்கம் கொண்டவர்களுடன் பழகி ஜாலிக்காக மதுகுடித்து அதற்கு அடிமையாகி ரத்தத்தை விற்பனை செய்து மதுகுடிப்பது தெரிய வந்துள்ளது.
தஞ்சை சிவகங்கை பூங்காவில் சம்பவத்தன்று 10-க்கும் மேற்பட்ட பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் பீர் மற்றும் மதுகுடித்து கொண்டு இருந்துள்ளனர். இதனை கண்ட உள்ளூர் வாலிபர் ஒருவர் அதிர்ச்சி அடைந்து அவர்களை கண்டித்துள்ளார். அப்போது அவர் ‘‘பெற்றோர்கள் உங்களை படிக்க வைத்து செலவுக்கு கொடுக்கும் பணத்தை இப்படி மது குடிக்க செலவு செய்கிறீர்களே. இதனால் உங்கள் உடல் நலம் கெடும் என்பது தெரியாதா?’’ என்று கூறி உள்ளார்.
அவரது பேச்சுக்கு செவி சாய்க்காத மாணவர்கள் ‘‘நாங்கள் அப்பா, அம்மா கொடுக்கும் பணத்தில் மதுகுடிக்கவில்லை. எங்களது ரத்தத்தை விற்பனை செய்து கிடைத்த பணத்தில் தான் மதுகுடிக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.
மாணவர்களின் இந்த பதிலை கேட்டு வெலவெலத்து போன அவர் இந்த மாணவர்களை திருத்த கவுன்சிலிங் கொடுத்தால் நல்லது என்று தனது ஆதங்கத்தை கூறினார்.
Loading...
No comments: