Face Upward - Widget

தவறான பாதையில் செல்கிறதா தயாரிப்பாளர்கள் சங்கம்? | Producers' Association is going in the wrong direction?

Loading...


தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் கேயார் தொலைநோக்குடன் பிரச்சனைகளை எதிர்கொள்கிறவர் என்ற நம்பிக்கை பரவலாக இருக்கிறது. பிரச்சனைகளின் உடனடி தீர்வை நோக்கி செல்லாமல் நிரந்தர தீர்வுக்கான வழிகளை உருவாக்குவார் என்ற நம்பிக்கையின் பேரிலேயே கேயார் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சமீபமாக சினிமா நிகழ்ச்சிகளில் அவர் வைக்கும் கோரிக்கைகளும், விடுக்கும் சவால்களும் நம்பிக்கையை மறுபரிசீலனை செய்வதாகவே உள்ளது.


பாடல்கள் வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கேயார், ஐம்பது லட்ச முதலீட்டில் மினி திரையரங்குகள் அமைக்க தமிழக அரசு அனுமதி தர வேண்டும், திரையரங்குகளுக்கான லைசென்ஸை பெறுவது சிரமமாக உள்ளது. அதற்கான விதிகளை தளர்த்த வேண்டும் என்ற கோhpக்கைகளை முன் வைத்தார். இரண்டும் வரவேற்கப்பட வேண்டிய கோhpக்கைகள்.


ஆனால் இந்தக் கோரிக்கைகள் எழுவதற்கான காரணத்தை கேயார் பார்க்க தவறிவிட்டார். அந்த காரணத்தை சீரமைக்காமல் எத்தனை சலுகைகள் பெற்றாலும், சீர்த்திருத்தங்கள் செய்தாலும் அது விழலுக்கு இறைத்த நீராகிவிடும்.


திரையரங்குகளுக்கு சென்று படம் பார்க்கும் ஜனங்களின் எண்ணிக்கை குறைந்ததும், திரையரங்குகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அருகி வருவதும் தமிழ் திரையுலகின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. தமிழகத்தில் புதிய படங்களை திரையுடக் கூடிய திரையரங்குகள் 800 க்கும் குறைவாகவே உள்ளன. ஆந்திராவில் இதே எண்ணிக்கை இரண்டாயிரத்துக்கும் மேல். அங்கு ஒவ்வொரு திரையரங்கும் புதிய படங்களின் வெளியீட்டின் போதும் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றன. ஏன் இந்த வித்தியாசம்?


ஆந்திராவில்...


திரையரங்கு கட்டணத்தை படங்களுக்கு ஏற்ப கண்டபடி உயர்த்துவதில்லை. ஆந்திராவிலும், கேரளாவிலும் புதிய படத்தை நல்ல திரையரங்குகளில் 80 ரூபாய்க்கு கண்டு ரசிக்கலாம். திரையரங்கு கட்டணம் நுழைவுச்சீட்டில் இல்லாத திரையரங்குகள் அங்கு இல்லை என்றே சொல்லலாம். புறநகர்களில் ஒன்றிரண்டு திரையரங்குகள் விதிவிலக்காக இருக்கலாம்.


தமிழகத்தில் திரையரங்கு பராமரிப்பு மிக மோசம் என்பதுடன் டிக்கெட் கட்டணத்தையும் பல மடங்கு உயர்த்திவிடுகிறார்கள். சென்னை புறநகர் திரையரங்குகளில் ஒருவாரம் கழிந்த பின்பும் ஆரம்பம் திரைப்படத்துக்கு கவுண்டாpல் 200 முதல் 250 ரூபாய் கட்டணமாக வசூலித்தனர். பாண்டிய நாடு படத்துக்கு சொற்ப ஆள்களே இருந்தபோதும் 150 ரூபாய் வNலிக்கப்பட்டது.


இந்த திரையரங்குகளின் உண்மையான கட்டணம் யாருக்கும் தெரியாது. இவர்கள் 250 ரூபாய் பிடுங்கிக் கொள்ளும் டிக்கெட்டிற்கு அரசு நிர்யணித்திருப்பது 60 ரூபாயை தாண்டாது. நான்கு மடங்கு கொள்ளை. சென்னையில்தான் இப்படியென்று கும்பகோணத்தில் உள்ள திரையரங்கில் ஆரம்பம் பார்க்கச் சென்ற போது அங்கு வசூலித்த கட்டணம் சென்னையைவிட அதிகம். 15,0 200 மற்றும் 250 ரூபாய். இது படம் வெளியாகி பத்தாவது நாள் நிலவரம்.


மல்டிபிளக்ஸ்களும், ஒருசில திரையரங்குகளும் தவிர்த்து மற்ற அனைத்து திரையரங்குகளும் கட்டண கொள்ளையில் ஈடுபடுகின்றன. திரையரங்கு பராமாpப்பு மற்ற மாநிலங்களைவிட படுமோசம். இதனை கவனித்து சீர்செய்ய வேண்டிய அதிகாhpகள் முதலாளிகளின் பண மற்றும் அரசியல் பலத்துக்கு துணை போகிறார்கள் அல்லது பயப்படுகிறார்கள். இந்த கொள்ளையின் கணசமான பங்கு போலீஸhரையும் சென்றடைவதால் அரசுதரப்பு முற்றிலுமாக முடங்கிப் போயுள்ளது.


தொடர்ந்து கொள்ளையடிக்கப்படும் நிலையில் தமிழக மக்கள் திரையரங்கை கொஞ்சம் கொஞ்சமாக நிராகரித்தனர் என்பதே உண்மை.


இந்த கொள்ளையை


நிறுத்தாதவிடில் கேயார் சொல்லும் மினி திரையரங்குகளுக்கும் இப்போதைய திரையரங்குகளின் நிலைதான் ஏற்படப் போகிறது. எனில் அதனால் என்ன பயன்?


கார்ப்பரேட் நிறுவனங்கள் பிரமாண்ட பட்ஜெட்டில் படம் எடுப்பதுடன் குறைந்த பட்ஜெட் படங்களையும் எடுக்க வேண்டும். இல்லை எனில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கேயார் எச்சரித்திருக்கிறார்.


மினிமம் பட்ஜெட் படங்களை சாகடித்ததே திரையரங்குகளின் கட்டண கொள்ளைதான். மேலும், முன்னணி நடிகர்களின் படங்களை ஒரே நேரத்தில் அதிக திரையரங்குகளில் அதிக கட்டணத்தில் வெளியிட்டு லாபம் பார்த்தவர்கள் மினிமம் பட்ஜெட் படங்களை சீண்டுவதில்லை. சின்ன பட்ஜெட் படங்களை திரையிடுவதில்லை என்பதில் உறுதியாக இருக்கும் திரையரங்குகளை வழிக்கு கொண்டு வருவதைவிட்டுவிட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சவால் விடுவதில் அர்த்தமில்லை. இருக்கிற படங்களுக்கு திரையரங்குகளை பங்கிட்டு தரும் திராணி இல்லாத நிலையில் மேலும் மேலும் சின்ன பட்ஜெட் படங்களை தயாரிப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது?


தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு இப்போதைய தேவை சலுகைகள் அல்ல. திரையரங்குகளின் டிக்கெட் கட்டணம் உள்பட அனைத்து விதிகளையும் அரசு கறாராக செயல்படுத்த வேண்டும், சட்டத்துக்குப் புறம்பாக செயல்படுகிற திரைத்துறையினர் யாராக இருப்பினும் அரசு கறார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துவது ஒன்றே திரையுலகம் பிழைத்திருப்பதற்கான சரியான வழியாக இருக்கும்.
Loading...
tamizilnews. Powered by Blogger.