Face Upward - Widget

கமல் பங்குபெறும் சென்னை சர்வதேச திரைப்பட விழா | Participating Kamal Chennai International Film Festival

Loading...



பதினோராவது சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 11ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது. 19ஆம் தேதிவரை நடக்கும் இந்த திரைப்பட விழாவில் மொத்தம் 58 நாடுகளைச் சேர்ந்த 180 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளது.


CIFF பதினோராவது வருடமாக இந்த திரைப்பட விழாவை நடத்தி வருகிறது. தமிழகத்தில் நடத்தப்படும் பெ‌ரிய திரைப்பட விழா இதுவே. இந்த ஆண்டு திரைப்பட விழாவையொட்டி ஆண்ட்‌ரியாவின் குரலில் ஒரு பாடல் வெளியிடப்பட இருக்கிறது. மேலும் இளம் நடிகர்களை ஊக்குவிக்கும் வகையில் அமிதாப்பச்சன் யூத் ஐகான் என்ற பெய‌ரில் விருது ஒன்றையும் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.


11ஆம் தேதி நடக்கும் தொடக்கவிழாவில் சிறப்பு விருந்தினராக கமல்ஷாசனும், ஷபனா ஆஸ்மியும் கலந்து கொள்கின்றனர். நுழைவுச்சீட்டு வாங்குகிறவர்களுக்கு மட்டுமே அனுமதி.
Loading...
tamizilnews. Powered by Blogger.