Face Upward - Widget

தீபிகா படுகோன் நடித்த படம் இயக்குனர் மீது வழக்கு பதிவு செய்ய கோர்ட் உத்தரவு | Deepika Padukone Court orders to register a case against film director

Loading...

தீபிகா படுகோன் பட இயக்குனர், தணிக்கை அதிகாரி மீது வழக்கு பதிவு செய்ய போலீசுக்கு லக்னோ கோர்ட் உத்தரவிட்டது. நடிகை தீபிகா படுகோன், ரன்வீர் சிங் ஜோடியாக நடித்துள்ள இந்தி படம் ராம் லீலா.


இப்படத்தின் டைட்டிலும், கதையும் மத உணர்வுகளை தூண்டும் விதமாக உள்ளது எனவே பட இயக்குனர் மீதும், படத்துக்கு சான்றிதழ் அளித்த தணிக்கை அதிகாரி குழு தலைவர் லீலா சாம்சன் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று லக்னோவை சேர்ந்த சமூக சேவகர் நுதன் தாகூர் என்பவர் போலீசில் புகார் அளித்தார். ஆனால் அதை போலீசார் ஏற்கவில்லை.


இதையடுத்து லக்னோ கோர்ட்டில் நுதன் வழக்கு தொடர்ந்தார். அதில், அலகாபாத் ஐகோர்ட் உத்தரவை மீறி படத்துக்கான டைட்டிலை தணிக்கை குழு அனுமதித்திருக்கிறது.


இதுதொடர்பாக கோமதி நகர் போலீசில் புகார் அளித்தபோது அதை போலீசார் ஏற்க மறுத்துவிட்டனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.


இந்த புகார் தொடர்பாக கோமதி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள விவரத்தை வரும் டிசம்பர் 8ம் தேதி கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று லக்னோ ஜூடிசியல் மாஜிஸ்திரேட் சி.கே.சிங் உத்தரவிட்டார்.
Loading...
tamizilnews. Powered by Blogger.