Face Upward - Widget

ஐஸ்வர்யா ஒரு மிகச்சிறந்த தாய்: அபிஷேக் பச்சன் | Aishwarya is a great mother: Abhishek Bachchan

Loading...

பையில் நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் அபிஷேக் பச்சன் முன்னாள் உலக அழகியும், தனது மனைவியுமான ஐஸ்வர்யா ராய் குறித்து கூறியதாவது:-


ஐஸ்வர்யாவின் தொழில் பக்தி மற்றும் அர்ப்பணிப்பு குறித்து கேள்விக்கு இடமில்லை. 2 வயது மகள் ஆராத்யாவை மிகுந்த அக்கறையுடன் கவனித்துக்கொண்டு அன்புடன் வளர்த்துவரும் ஐஸ்வர்யா, ஒரு மிகச் சிறந்த தாயாக விளங்குகிறார். 


ஒரு இணை நடிகராக, அவருடன் பணியாற்றுவதை மிகவும் விரும்புகிறேன். இது எனக்கு மிகுந்த சந்தோஷமே.


திரை உலகத்திலிருந்து மகள் ஆராத்யாவை பாதுகாக்கவே நானும், ஐஸ்வர்யாவும் விரும்புகிறோம். குழந்தையின் பெற்றோராக மகள் ஆராத்யா, ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கவே நாங்கள் இருவரும் விரும்புகிறோம்.


ஊடகங்கள் மற்றும் திரை பத்திரிக்கைகளில் இருந்து நான் பாதுகாக்கப்பட்டேன். 


எனக்கு 18 வயது இருக்கும்போது, முதலாவதாக திரைப்பத்திரிக்கை ஒன்றில் வந்தேன். எனவே நட்சத்திரங்களின் குழந்தைகளை புகைப்படம் எடுப்பதிலிருந்து ஊடகங்கள் கட்டுப்பாடு காட்ட வேண்டிக்கொள்கிறேன்.


இவ்வாறு அவர் கூறினார்.
Loading...
tamizilnews. Powered by Blogger.