Face Upward - Widget

'உன் கையை உடைப்போம்'- அராஜக ஆஸி.கேப்டன்! | 'your hand Will Break' - Aussie anarchist. Captain!

Loading...


பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் சற்றும் எதிர்பாராத விதமாக ஆஸ்ட்ரேலியா அபார வெற்றி பெற்றது. இதனால் உணர்ச்சிகளின் மோதல் சற்று அதிகமாகவே இருந்தது. மிட்செல் ஜான்சன், ஜோ ரூட்டிற்கு பந்து வீசும்போது பல கோணங்கித்தனங்களைச் செய்தார்.


அட! இதெல்லாம் கிரிக்கெட்டில் சகஜமப்பா என்று ஆஸ்ட்ரேலியா விட்டு விடும், ஆனால் இந்த முறை கிளார்க், ஆஸி.கேப்டனே அசிங்கமான நடத்தைக்காக அபராதம் விதிக்கப்பட்டது சபாஷ் சரியான முடிவு என்று பாராட்டுதல்களை கிளப்பியுள்ளது.


இங்கிலாந்து 2வது இன்னிங்ஸின் முடிவுத் தறுவாயில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பேட்டிங் செய்துகொண்டிருந்தார். அப்போது மைக்கேல் கிளார்க் அவரிடம்:


'உன்னுடைய கையை உடைக்கப்போகிறோம், தயாராயிரு' என்று கூறியது ஸ்டம்ப் மைக்ரோ போனில் தெளிவாக பதிவானது. ("get ready for a broken f***ing arm")


தவறை ஒப்புக் கொண்ட கிளார்கிற்கு அவரது ஆட்டத்தொகையிலிருந்து 50% அபராதம் விதிக்கப்பட்டது.


நான் கூறியதெல்லாம் ஒன்றுமில்லை இதைவிட மோசமான ஏச்சுக்களையும் பேச்சுக்களையும் நான் மைதானத்தில் கேட்டிருக்கிறேன்... என்று கிளார்க் சற்றும் மனம் தளராமல் பதில் தெரிவித்துள்ளார்.
Loading...
tamizilnews. Powered by Blogger.