Face Upward - Widget

'சிறையிலிருந்து ஆஸ்ட்ரேலியர்களை தப்ப விட்டோம்' | "We have to escape from the prison to the Australians'

Loading...


பிரிஸ்பன் டெஸ்டில் ஆஸ்ட்ரேலியாவை வெற்றிபெறச் செய்தது மூலம் இங்கிலாந்து ஆஸ்ட்ரேலியாவை தோல்வியின் சிறையிலிருந்து தப்பவிட்டுள்ளது என்று கிரிக்கெட் வர்ணனையாளர் பாய்காட் கூறியுள்ளார்.


இது குறித்து சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிக்கையில் அவர் எழுதியுள்ள பத்தியில் கூறியிருப்பதாவது:


ஆஸ்ட்ரேலியா முதல் இன்னிங்ஸில் 132/6. இதைவிட என்னவேண்டும்? நாம் அங்கிருந்து அவரகளை சிறையிலிருந்து தப்பவிட்டோம். 300 ரன்கள் பக்கத்தில் ஆஸ்ட்ரேலியா எடுத்தது அங்குதான் ஆட்டம் கைநழுவி போய்விட்டது. பிராட் ஹேடின் 2 இன்னிங்ஸ்களிலும் அரை சதம் எடுத்தது நல்ல சகுனம் அல்ல. அவருக்கு இங்கிலாந்து பவுலர்கள் ஷாட் பிட்சாக வீசினர். ஒரு பந்தையாவது டிரைவ் ஆடுமாறு வீசினார்கள் என்பதாக் எனக்கு நினைவில் இல்லை.


மிட்செல் ஜான்சனின் கால்களில் பந்தைக் கொண்டு போட்டால் அவர் என்ன வேடிக்கைப் பார்ப்பாரா? கிரேம் ஸ்வான் ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே தூக்கி போட்டார் அவரும் வெளுத்தார்.


ஸ்வான் தன்னால் விக்கெட்டுகளை வீழ்த்த முடியாதபோது சிக்கனமாக பந்து வீசும் முயற்சியில் இறங்கவேண்டும், அதை விடுத்து தொடர்ந்து அட்டாக் பண்ணுகிறேன் என்று பந்து வீசினால் வாங்கிக் கட்டிக் கொள்ளவேண்டியதுதான்.


பிராடும், ஜேம்ஸ் ஆண்டர்சனும் வீசாத தருணங்களில் கடவுள்தான் இங்கிலாந்தை காப்பாற்ற வேண்டியிருக்கிறது.


அதே போல் 2வது இன்னிங்ஸில் வார்னர், கிளார்க்கிற்கு எதிராக கேப்டன்சி பைத்தியக்காரத் தனமாக இருந்தது. இவர்கள் தங்கள் இஷ்டத்திற்கு சிங்கிள்களை எடுத்தனர். மொத்தமாக தடுப்பு உத்திக்கு சென்றார் குக்.


மைக்கேல் கிளார்க்கை ஸ்டரைக்கிற்கு வரவழைத்து அவரை பவுன்ஸ் செய்து எடுப்பது திட்டம், ஆனால் கிளார்க்கிற்கு தெரிந்திருந்தது அது எனவே போட்ட ஷாட்பிட்ச் பந்தையெல்லாம் புல் ஷாட்டாக ஆடித் தள்ளினார்.


ஒருநாள் போட்டிகளிலேயே ஜான்சன் ஜொனாதன் டிராட்டை ஷாட் பிட்ச் பந்துகளில் எடுத்துள்ளார். அப்போது முதல் ஏன் இந்தப் பிரச்சனையை அவர் சரி செய்து கொள்ள்வில்லை? ஒருநாள் போட்டி வேறு டெஸ்ட் வேறு டிராட் நினைத்தால் அதைவிட மடத்தனம் வேறு இருக்க முடியாது.


மேட் பிரையர் கடந்த 8 போட்டிகளில் ஒன்றுமேயில்லை. அதுவும் அவுட் ஆகும் விதம் பயங்கரமகா உள்ளது. அவர் தன் கடைசி வாய்ப்பில் இருக்கிறார்.


இவ்வாறு சாடியுள்ளார் பாய்காட்.
Loading...
tamizilnews. Powered by Blogger.