Face Upward - Widget

பள்ளி விடுதியில் மாணவிகளை பலாத்கார முயற்சி | Trying to force Girls in the school hostel

Loading...
மீஞ்சூர் அருகே பள்ளி விடுதியில் மாணவிகளை பலாத்காரம் செய்ய முயன்ற 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.


மீஞ்சூர் அருகே உள்ளது திருவெள்ளைவாயல் கிராமம். இங்கு மத்திய அரசின் சர்வசிக்ஷா அபியான் திட்டத்தின் சார்பில் கிராம வளர்ச்சி தொண்டு நிறுவனத்தின் சார்பில் உண்டு உறைவிட பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளியில் 125 மாணவ-மாணவிகள் தங்கி முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படித்து வருகின்றனர்.


இங்கு 50 மாணவர்கள், 39 மாணவிகள் தங்கியுள்ளனர். பாதுகாப்பாக உள்ள விடுதியின் மதில் சுவர் ஏறி குதித்து 3 பேர் கதவை தட்டி எழுப்பினர். அவர்கள் மாணவிகளை பலாத்காரம் செய்ய முன்றதாக தெரிகிறது.


மாணவிகளின் சத்தம் கேட்டு ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட அனைவரும் தூக்கத்தில் இருந்து எழுந்த நிலையில் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு 3 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.


இது குறித்து தலைமை ஆசிரியை அமலா காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் காட்டூர் சப்-இன்ஸ்பெக்டர் கோவர்த்தனன் வழக்குப்பதிவு செய்து விசராணை நடத்தினர்.


விசாரணையில் அவர்கள் திருவெள்ளைவாயல் மாதா கோவில் தெருவை சேர்ந்த முருகன் (வயது 23), லோகேஷ் (27), பிரகாஷ் (23) என்பது தெரிய வந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து பொன்னேரி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிபதி உத்திரவின் பேரில் அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Loading...
tamizilnews. Powered by Blogger.