Face Upward - Widget

'இவன் வேற மாதிரி' எப்படி? இய‌க்குன‌ர் சரவணன் பேட்டி | 'This is a different sort of' how? Interview with director Saravanan

Loading...


எங்கேயும் எப்போதும் சரவணன் என்றுதான் குறிப்பிடுகிறார்கள். அது கிரெடிட். முதல் படத்தில் சின்னதான ஒரு கருவை எடுத்து சிக்கலில்லாமல் சுவாரஸியமாக தந்ததற்கு கிடைத்த பரிசு என்றும் சொல்லலாம். சில இயக்குனர்கள் இதுபோன்று முதல்பட அடைமொழியில் சிக்கி பிறகு வெளியே வரவேயில்லை. ஆனால், எங்கேயும் எப்போதும் சரவணன் இந்தப் படம் வெளிவந்தால் இவன் வேற மாதிரி சரவணன் என்று அழைக்கப்படுவதற்கான வாய்ப்பு அவர் பேச்சில் தெரிகிறது.


இரண்டாவது படத்துக்கு ஏன் இவ்வளவு தாமதம்?


எங்கேயும் எப்போதும் ரிலீஸாகி இரண்டு வருஷமாச்சு. இரண்டு வருஷத்துக்கு அப்புறமா இவன் வேற மாதிரி வருது. இந்த ஸ்கிரிப்ட் பண்றதுக்காக நான் எடுத்துகிட்டது மூணு மாசம். அதுக்கப்புறம் ஒரு ஹீரோவை ஃபாலோ பண்ணுனேன். அவர் இந்த ஸ்கிரிப்ட் இம்ப்ரஸ் பண்ணலைன்னு சொல்லிட்டார். ஒரு கதை எல்லோருக்கும் பிடிக்கணும்கிற அவசியம் இல்லை. பட், எனக்கு நம்பிக்கை இருந்தது. புரொடியூசருக்கும் கான்பிடெண்ட் இருந்தது. சரி, வேற யார்கிட்ட போகலாம்னு இருந்தப்போ தயாரிப்பாளர் போஸ் சார் கும்கி ட்ரெய்லரை காட்டினார். ட்ரெய்லர் ரொம்ப நல்லா வந்திருக்கு, விக்ரம் பிரபு உங்களுக்கு ஓகேவான்னு கேட்டார். ட்ரெய்லர் எனக்குப் பிடிச்சிருந்தது. ஸேh, கும்கி ரிலீஸுக்கு முன்னாடியே விக்ரம் பிரபுவை கமிட் பண்ணிட்டோம்.


விக்ரம் பிரபு பற்றி சொல்லுங்க?


விக்ரம் பிரபுவை எல்லோருக்கும் தொpயும். அவர் ஒரு பெரிய பேமிலியிலயிருந்து வந்திருக்கார். ஆனா, எந்த பந்தாவுமே இல்லாம ரொம்ப ஒத்துழைச்சி நடித்தார். என்ன சொல்றேhமோ அதை அப்படியே கரெக்டா பண்ணிக் கொடுத்தார்.


படத்தில் வில்லன் போர்ஷன் நல்லா வந்திருக்கிறதா சொல்றாங்களே?


இதுல வில்லனா வம்சி நடிச்சிருக்கார். எல்லாப் படத்துலயும் வில்லன்கள்தான் டார்ச்சர் பண்ணுவாங்க. இந்தப் படத்துல வில்லனை நாங்க கொஞ்சம் டார்ச்சர் பண்ணியிருக்கோம். அந்த டார்ச்சர்தான் அவருக்கு இந்தப் படத்துல கிரெடிட். இந்த வருடத்தோட பெஸ்ட் வில்லனா அவர் இருக்கிறதுக்கு வாய்ப்பு இருக்கு.


கணேஷ் வெங்கட்ராமனுக்கு எந்த மாதிரியான கேரக்டா?


கணேஷ ;வெங்கட்ராமன் கொஞ்ச போர்ஷன்தான் வருவார். கொஞ்ச நேரம்னாலும் படம் முடிஞ்சு வெளியே வரும் போது முழுப் படத்திலும் அவர் இருந்த மாதிரி ஒரு ஃபீலிங்கை கொடுக்கும். அந்த மாதிரி கேரக்டரைசேஷன் அவரோடது.


ஹீரோயின்...?


சுரபியை பற்றி சொல்லணும்னா பெஸ்ட் புதுமுக நடிகையாக இருக்கிறதுக்கு வாய்ப்பிருக்கு. பெண்ணுங்க பொதுவா பயந்த சுபாபமா இருப்பாங்க. ஆனா சுரபி படத்தோட கிளைமாக்ஸ்ல தில்லா ஒரு விஷயம் பண்ணியிருப்பாங்க. படம் பார்க்கும் போது நீங்களும் அதை ஃபீல் பண்ணுவீங்க.


டெக்னீஷியன் டீம்...?


கேமராமேன் சக்தி சாருக்கு இந்தப் படம் ஒரு அடுத்தக்கட்டமா இருக்கும். எல்லா டெக்னீஷியன்களுமே சிறப்பா செய்திருக்காங்க. முக்கியமா ஆர்ட் டைரக்டர் விஜய் முரளி சார், எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத், இசையமைப்பாளர் சத்யா சார். நான் முக்கியமா நன்றி சொல்ல வேண்டியது தயாரிப்பாளர்தான். ஏன்னா நாங்க பிளான் பண்ணியிருந்ததைவிட கொஞ்சம் அதிக நாள் ஷுட் பண்ணியிருக்கோம். எக்ஸ்ட்ராவா சில நாள் ஷுட் பண்ணணும்ங்கிறதுக்கான காரணத்தை நான் சொன்னதும் அவரும் புரிஞ்சுகிட்டார். ஒரு நல்ல படம் பண்ண கண்டிப்பா புரொடியூசரோட சப்போர்ட் ரொம்ப முக்கியம்.


அதிக நாள் ஷுட் செய்ய என்ன காரணம்?


பிளான் பண்ணுனதைவிட அதிக நாள் போனதுக்கு காரணம் படத்தை இன்னும் சிறப்பா கொடுக்கணும்ங்கிறதுதான். எங்கேயும் எப்போதும் படத்துக்குப் பிறகு இரண்டு வருஷம் கழிச்சு வர்றேhம். அந்தப் படத்தால் சின்ன எதிர்பார்ப்பும் இருந்தது. அதை பூர்த்தி செய்யணும்ங்கிற சின்ன கான்ஷியசும் எனக்குள்ள இருந்தது.


படத்தைப் பார்த்த பிறகு என்ன தோன்றியது?


ஓவராலா படத்தைப் பார்த்தப்புறம் நம்பிக்கையா இருக்கேன். எங்கேயும் எப்போதும் படத்தோட டைரக்டர்னு நம்பி வர்றவங்களை படம் ஏமாத்தாது. அதே மாதிரி ஸ்கிரின் ப்ளே நல்லா பண்ணியிருக்கிறதா நினைக்கிறேன். ஒத்துழைப்பு கொடுத்த எல்லோருக்கும் நன்றி.
Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.