Face Upward - Widget

பார்ட்டிக்கு போகும் முன் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் | Things to keep in mind before going to the party

Loading...


ஹேர் ஸ்டைல் :

முதல்ல நாம் முகத்துக்கு எந்த மாதிரி ஹேர் ஸ்டைல் பொருந்தும்னு பார்க்கணும். பார்ட்டிக்கு போறப்ப, முன் பக்க முடி கலையாம இருக்க வேண்டியது ரொம்ப முக்கியம். ரொம்ப ஸ்பெஷலான பார்ட்டிக்கு தற்காலிக ஹேர் கலர் பண்ணிக்கலாம். இது ஒரு நாள் மட்டும் இருக்கும்.


மேக்கப்:

மிதமான காம்பேக்ட், பவுடர், ஐ லைனர், காஜல், லிப்ஸ்டிக் அவசியம். இடத்துக்கும், பார்ட்டிக்கும் ஏத்தபடி இதையே இன்னும் அதிகமாக போட்டுக்கலாம். டிரெடிஷனல் பார்ட்டின்னா பொட்டு வச்சுக்கலாம். வெஸ்டர்ன் பார்ட்டிக்கு தேவையில்லை நகங்களை அழகாக ஷேப் பண்ணி, மேட்ச்சிங் நெயில் பாலீஷ் போடனும். அது பிடிக்காதவங்க நகங்களை சின்னதா வெட்டி நகங்களோட நிறத்துல நெயில் பாலீஷ் போட்டுக்கலாம்.


உடை:

சேலை கட்டுறவங்களாக இருந்தா சேலையை மட்டுமில்லாமல் உள் பாவாடையும் இஸ்திரி செய்து தான் கட்டணும். மெல்லிசான மெட்டீரியல்ஸ், ஃபிஷ் கட் உள்ள பாவாடைகள் சேலை கட்டறவங்களோட உடம்பை அழகான ஷேப்ல காட்டும்.


குண்டானவங்களுக்கு மெல்லிசான சாஃப்ட் சில்க் மற்றும் காட்டன் புடவைகள் அழகாக இருக்கும் சேலையே கட்டத் தெரியாது ஆனா பார்ட்டிக்கு சேலை தான் கட்டியாகணும்னு நினைக்கிறவங்க இப்ப பிரபலமா இருக்கிற ரெடிமேட் புடவைகளை கட்டலாம்.


மடிப்போ, பட்டையோ வைக்க வேண்டிய அவசியமில்லாம அப்படியே உடுத்திக்கிற சேலை அது. சேலை கட்டத் தெரிஞ்சா மட்டும் போதாது. முந்தானையை அழகா முழங்கைல தாங்கிப் பிடிக்கிற ஸ்டைலும் முக்கியம். சல்வார் போடறவங்களாக இருந்தா அனார்கலி மாடலை தேர்ந்தெடுக்கலாம்.


ஹை நெக், பேன்ட் அடில நிறைய சுருக்கம், கண்ணாடி மாதிரி துப்பட்டா... இது தான் இப்ப ஃபேஷன். துப்பட்டாவை கழுத்தோட ஓட்டி போடணும். அதுக்குக் கீழே தான் நகைகள் தெரியணும். வெஸ்டர்ன் டிரெஸ் போட நினைக்கிறவங்க கையில்லாததும், இறக்கமான கழுத்து வச்சதையும் தவிர்த்து நீளமான டாப், அதுக்கேத்த பேன்ட் அல்லது ஸ்கர்ட் அணியலாம்.


நகைகள்:

பெரிய மோதிரம் போடறது இப்ப ரொம்ப பிரபலம். ஒரு கைல வாட்ச் இன்னொரு கைல வளையல் போடலாம். ரெண்டு கைகளுக்கும் வளையல் போடறது ஹோம்லியான தோற்றத்தை தரும்.


செருப்பு:

லேசா ஹீல்ஸ் வச்ச செருப்புகள் ஒருத்தரோட தோற்றத்தையே மாத்திக்காட்டும். பார்த்து பார்த்து டிரெஸ்சையும் மேக்கப்பையும் பண்ணிட்டு செருப்பு விஷயத்துல அலட்சியம் கூடாது.


பார்ட்டிக்குனு தனியா சில செட் ஸ்பெஷல் செருப்புகள் வச்சிருக்கிறது அவசியம். நீளமான கை வச்ச டிரெஸ், டார்க் நிற நெயில் பாலீஷ், பளபள கல் வச்ச நகைகள் மாட்டல், பெரிய பொட்டு, இதெல்லாம் பார்ட்டிக்கு வேண்டவே வேண்டாம்.
Loading...
tamizilnews. Powered by Blogger.