Face Upward - Widget

'டீ விற்றவர் பிரதமர் ஆக முடியாது' - மோடி மீது தாக்கு | 'Tea seller can not become prime minister' - Attack on Modi

Loading...


குஜராத் முதலமைச்சரும் பாஜக வின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியை சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் கடுமையாக விமசித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மோடி குறித்து பேசிய சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் நரேஷ் அகர்வால், டீ விற்றவர் எல்லாம் நாட்டின் பிரதமர் ஆக முடியாது என்று கூறினார்.


பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற பாஜக பேரணியில் நரேந்திர மோடி, மத்தியில் ஆளுபவர்களுக்கு வறுமை என்பது தெரியாது. ஆனால் எனக்கு அதனை பற்றி நன்றாக தெரியும். நான் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். எனது தந்தைக்கு உதவிய நான் ரயில்வே நிலையத்தில் ரயில் டீ விற்றேன் என பேசியிருந்தார்.


இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் ஹார்தோய்யில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் நரேஷ் அகர்வால், 'டீ விற்றவர் எல்லாம் நாட்டின் பிரதமர் ஆக முடியாது. கான்ஸ்டபிள் எப்போதும் கான்ஸ்டபிளாகத்தான் நடந்துகொள்ளமுடியும். ஒருபோதும் அவர் எஸ்.பி.யாக நடந்துகொள்ள முடியாது. நீங்கள் ஒரு கான்ஸ்டபிளை எஸ்.பி.ஆக்கினால், அவரால் ஒரு எஸ்.பியை போல செயல்பட முடியாது.


தெருக்கூத்தாடிகள் கூட கூட்டத்தை கூட்டுகிறார்கள். அப்படியிருக்கையில் நரேந்திர மோடிக்கு கூட்டம் கூடுவது குறித்து பெரிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை' எனக் கூறினார்.


நரேஷ் அகர்வாலின் இந்த பேச்சு மிகவும் மரியாதை குறைவாக இருந்ததாக தெரிவித்த பாஜக இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது
Loading...
tamizilnews. Powered by Blogger.