Face Upward - Widget

நல்ல ஆரோக்கியமான வாழ்விற்கான சூப்பர் உணவுகள்!!! | Super foods are good for healthy youth!

Loading...


உடலுக்கு மிகவும் அவசியமானது சத்துக்கள். எவ்வளவு தான் நாக்குக்கு சுவை முக்கியமாக இருந்தாலும், உடலுக்கு சத்து தான் தேவை. நாக்குக்கு சுவை வேண்டுமென்று கண்ட கண்ட உணவை உண்டால், உடலானது ஆரோக்கியத்தை இழந்துவிடும்.


நல்ல சத்தான உணவை சுவையுடன் சமைத்து சாப்பிட்டால், சுவை, சத்து என இரண்டும் கிடைக்கும். மேலும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். அதுமட்டுமின்றி இக்காலத்தில் அவசர வேலை என்று உணவில் பலர் கவனம் செலுத்துவதில்லை.


இதனால் குழந்தைகள் பெரும்பான்மையாக பாதிக்கப்படுகின்றனர். வயதானவர்களும், போதிய சத்து இல்லாததால், இதய நோய்க்கு ஆளாகின்றனர். ஆகவே இதனை போக்குவது அனைவருடைய கடமையாகும்.


அதற்கு காலை வேளைகளில் அவசரமாக சமைத்தாலும், சத்தான உணவை சமைப்பது மிகவும் முக்கியமாகும். கொழுப்பு கலந்த உணவு சுவையை கொடுக்குமே தவிர, அதில் ஆரோக்கியம் என்பது துளியும் இருக்காது.


இதனால் பலவித நோய்களுக்கு ஆளாகி அவதி கொள்வதை தவிர்த்து, எண்ண செய்ய வேண்டும் என்பதை ஆராய்ந்து செய்தல் மிகவும் நல்லது. அதற்கு சத்துமிக்க உணவை சாலட், சூப் போன்ற வகையில் சமைத்து சாப்பிட வேண்டும்.


ஒவ்வொன்றையும் தயாரிக்கும் பக்குவத்தில் தயாரித்து உண்டால் மிகவும் நல்லது. இதோ இங்கே நோயெதிர்ப்பு சக்தி, ஆரோக்கியம், நல்ல கொழுப்பு போன்ற நல்ல உணவுகளை காண்போம்.


அவகேடா அவகேடாவில் MuFAs அமிலத்தின் சத்து மட்டும் தான் உள்ளது என்று நினைக்கின்றோம். ஆனால் அதில் பலவித மற்ற வைட்டமின்களும், இதயத்திற்கு நன்மை சேர்க்கும் சத்துக்களும் உள்ளன. மேலும் இதில் கரையக்கூடிய நார்சத்து, வைட்டமின் ஈ, ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்களும் உள்ளன.


எப்படி சாப்பிடுவது? இதனை சாலட், சல்சாஸ் போன்ற விதங்களில் உணவில் சேர்த்து கொள்ளலாம். குறிப்பாக அப்போது இதனுடன் சீஸ் அல்லது மாயோனைஸ் போன்றவற்றை சேர்க்க வேண்டாம்.


முட்டை முட்டை, கேடு என்று யார் கூறியது? முட்டையில் அரிய சத்துக்கள் உள்ளன. இதன் மஞ்சள் கருவில் இதயத்தை பாதிக்கும் கொழுப்பு தன்மை இருப்பதால், வாரத்தில் மூன்று முட்டைக்கு மேல் எடுத்து கொள்ள வேண்டாம். ஆனால் வெள்ளை கருவை தினமும் எடுத்து கொள்ளலாம். சொல்லப்போனால் உணவுகளிலேயே மிகவும் நல்ல ஆகாரம் முட்டை.


இதை எப்படி சாப்பிடுவது? முட்டையை பொரித்தோ, ஆம்லெட் செய்தோ சாப்பிடுங்கள். அதுவும் ஒரு மஞ்சள் கருவுடன், இரண்டு வெள்ளை கருவை சேர்த்து சமைத்து சாப்பிட வேண்டும்.


பால் கொழுப்பு இல்லாத ஒரு கப் பாலை தினமும் எடுத்து கொண்டால் மிகவும் நல்லது. இதில் உள்ள கால்சியம், எலும்புகளுக்கு மட்டும் சத்து கொடுக்காமல், கொழுப்பை நீக்கவும் உதவுகின்றது.


இதை எப்படி சாப்பிடுவது? ஓட்ஸ் செய்யும் போது, கொழுப்பு நீக்கப்பட்ட பாலை சேர்த்து உண்ண வேண்டும். இரவு தூங்க செல்லும் முன், மிதமான சூட்டுடன் இருக்கும் பாலை சிறிது சாக்லெட் சேர்த்து சாப்பிடுவது நல்லது.


பருப்பு பாதாம், பிஸ்தா போன்ற பருப்பு வகைகள் உடலுக்கு மிகவும் நல்லது. இவை ஆரோக்கியத்துக்கு மட்டும் இல்லாமல் கூந்தலுக்கும், சருமத்திற்கும் மிகவும் நல்லது. ஏனெனில் இதில் பல சத்துக்கள் உள்ளன.


எனவே தினமும் ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டால், உடலுக்கு பலம் சேர்க்க முடியும். மேலும் இவற்றில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் ஆரோக்கியமான எண்ணெய் உள்ளது.


இதை எப்படி சாப்பிடுவது? பாதாம், முந்திரி போன்ற பருப்பை சிறிதாக நறுக்கி, காலை உணவுடன் சேர்த்து உண்டால் ஆரோக்கியம் பெற முடியும். இடைப்பட்ட நேரத்திலும், இதை ஸ்நாக்காக உண்ணலாம்.


சால்மன் மீன் உணவையையும், எண்ணெயையும் எடுத்து கொண்டால், ஆரோக்கியமான உடல், கூந்தல் மற்றும் சருமம் போன்றவற்றை அடைய முடியும் என்று தோல் நிபுணர்கள் சொல்வதைக் கேட்டிருப்போம்.


ஆம், கடல் உணவான சால்மனில் வைட்டமின் டி, ஒமேகா- 3 ஃபேட்டி ஆசிட் போன்ற சத்து அதிகம் இருப்பதால், இதை அதிக அளவில் உணவில் சேர்த்தால் மிகவும் நல்லது.


இதை எப்படி சாப்பிடுவது? சால்மனை சுத்தம் செய்து, அதில் உப்பு, எலுமிச்சை சாறு, சிறிது நறுக்கிய பூண்டு, மிளகு தூள் போட்டு சிறிது நேரம் கழித்து சமைத்து, அதனை வேக வைத்த காயுடன் சேர்த்து உண்ண வேண்டும்.


தயிர் உலகத்தில் உள்ள எல்லா இடங்களிலும் தயிரை பிராதான உணவாக எடுத்து கொள்வதை பார்த்திருப்போம். அதிலும் கொழுப்பு குறைவாக இருக்கும் தயிரை உணவில் சேர்த்து கொண்டால் மிகவும் நல்லது.


ஏனெனில் இதில் நோயெதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும் பாக்டீரியா மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது.


இதை எப்படி சாப்பிடுவது? தயிருடன் சுவைமிக்க பழங்களால் செய்யப்படும் ஸ்மூத்தி செய்து உண்ணலாம். அதிலும் அந்தந்த பருவத்தில் கிடைக்கும் பழங்களை தயிருடன் சேர்த்து உண்டால் நல்லது. அதுவும் தயிரும் மாம்பழமும் சுவையோ சுவை.
Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.