Face Upward - Widget

மன்னிப்பாரா ஸ்ருதிஹாசன்? | shuruthihassan forgive?

Loading...


ஸ்ருதிஹாசனின் வீட்டில் அத்துமீறி நுழைந்த 45 வயது அசோக் சந்தர் திருமூக்கே கைது செய்யப்பட்டு நாளைவரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தர் கைது செய்யப்பட்டதை குறிப்பிட்டு அவரை கைது செய்த போலீஸாருக்கு ஸ்ருதிஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெ‌ரிவித்துள்ளார்.


அசோக் சந்தரும் அவரது குடும்பத்தினரும், ஸ்ருதிஹாசனை தாக்கவில்லை தம்பிக்கு வேலை கேட்டே அசோக் ச‌ந்தர் ஸ்ருதியை பார்க்கச் சென்றார் என மறுப்பு தெ‌ரிவித்துள்ளனர். தாக்குதல், மானபங்கமுயற்சி, அத்துமீறி நுழைதல் என மூன்று பி‌ரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


கைது செய்யப்பட்ட அசோக் சந்தர் திரைப்பட நக‌ரில் உதவியாளராக பணியாற்றுகிறவர். விருமாண்டி படத்தில் கமல்ஹாசன் ஒரு வசனம் பேசுவார். மன்னிக்கிறவன் மனுஷன். மன்னிப்பு கேட்கிறவன் வீரன். ஸ்ருதிஹாசன் சந்தரை மன்னிப்பாரா?
Loading...
tamizilnews. Powered by Blogger.