Face Upward - Widget

சீரியல் கொலையாளி; பெண்ணை நிர்வாணப்படுத்தி கொலை | Serial killer murdered a women after make nude

Loading...


மதுராந்தகம் அருகே பெண்ணை நிர்வாணப்படுத்தி கொடூரமாகக் கொன்ற சீரியல் கொலையாளியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.


செய்யூர் அருகே உள்ள தேவராஜபுரத்தைச் சேர்ந்தவர் சரோஜா (45). இவரது கணவர் கோவிந்தசாமி இறந்து விட்டார். ஒரு கூரை வீட்டில் சரோஜா தனியாக வசித்து வந்தார்.


இந்த நிலையில் சரோஜா இன்று காலை வீட்டில் பிணமாக கிடந்தார். அவரது தலை மற்றும் கழுத்து பகுதியில் சராமாரி வெட்டப்பட்டு இருந்தது. உடலில் துணி இல்லாமல் நிர்வாணமாக கிடந்தார்.


நேற்றிரவு யாரோ வீட்டுக்குள் புகுந்து அவரை கற்பழிக்க முயன்று இருக்கலாம் என்று தெரிகிறது. ஆசைக்கு இணங்காததால் அவரை வெட்டி கொன்று விட்டு தப்பி ஓடி விட்டனர்.
சரோஜா கொலை செய்யப்பட்டு கிடந்த தகவல் போலீசாருக்கு கிடைத்தது. மதுராந்தகம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் பஞ்சாட்சரம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.


போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு கொலையாளிகள் பற்றி துப்பு துலக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.


சரோஜா கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா? முன் விரோதம் மற்றும் குடும்ப தகராறில் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது நகை- பணத்துக்காக இந்த கொலை நடந்ததா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடக்கிறது.


கடந்த மாதம் இதே போலமுருகன் என்ற வாலிபர் வாய்க்காலில் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அந்த வழக்கிலும் இதுவரை கொலையாளிகள் பிடிப்படவில்லை.


இதற்கிடையே மேலும் ஒரு கொலை சம்பவம் நடந்திருப்பது அப்பகுதி மக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கொலைகளை செய்து வருவது சீரியல் கொலையாளியா என மக்களிடையே சந்தேகம் எழுந்துள்ளது.
Loading...
tamizilnews. Powered by Blogger.