Face Upward - Widget

சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜீவா | Samuthrakani directed Jeeva

Loading...


நிமிர்ந்து நில் படத்துக்குப் பிறகு தயாரிப்பாளர் செந்தில் கணேஷுக்காக ஒரு படம் இயக்கித் தருகிறார் சமுத்திரக்கனி.


தயாரிப்பாளர் செந்தில் கணேஷை சினிமாவுக்குள் தெரியாதவர்கள் இருக்க முடியாது. சீனு ராமசாமியின் முதல் படம் கூடல் நகர் உள்பட பல படங்களை தயாரித்தவர். அதனாலேயே கடனாளியாகி தற்போது புரொடக்ஷன் நிர்வாகியாக பல படங்களில் பணிபுரிந்து வருகிறார்.


அவரை மீண்டும் தயாரிப்பாளராக்க முன் வந்திருக்கிறார் சமுத்திரக்கனி. செந்தில் கணேஷின் புதிய படத்தை இவர்தான் இயக்குகிறார். ஜீவா ஹீரோவாக நடிக்கும் இப்படம் அடுத்த வருடம் ஆரம்பமாகிறது.


செந்தில் கணேஷுக்கு இந்தமுறை மாபெரும் வெற்றி கிட்ட நம் வாழ்த்துகள்.
Loading...
tamizilnews. Powered by Blogger.