Face Upward - Widget

சச்சின் தாயார்! தோனி, அஷ்வின் மைல்கல்! சுவையான தகவல்கள் | Sachin's mother! Dhoni, Ashwin Milestone! Interesting Information

Loading...


சச்சின் டெண்டுல்கரின் 24 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் இது நிகழ்ந்ததேயில்லை. அவரது தாயார் ரஜ்னி டெண்டுல்கர் மைதானத்திற்கு நேரில் வந்து சச்சின் கடைசி டெஸ்ட் ஆட்டத்தைப் நேரில் பார்த்து மகிழ்ந்தார்.


அவரால் நடக்க முடியாது என்பதால் வீல் சேருடன் வந்து பார்த்தார் அவர். சச்சின் உறவினர்கள் அனைவரும் நேற்று மைதானத்திற்கு வந்திருந்தனர்.


சச்சின் நேற்று....


களமிறங்கியபோது அவரது பேட் கைப்பிடி கிரிப் இந்திய தேசியக் கொடியின் மூவர்ணம் கொண்டதாக இருந்தது.


79வது டெஸ்டில் விளையாடும் இந்திய கேப்டன் தோனி நேற்று டேரன் பிராவோ, தியோநரைன், கேப்ரியல் ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்த காரணமாக இருந்தார். தியோ நரைன் கேட்சைப் பிடித்த போது தோனி 250 பேரை வீழ்த்திய சாதனையைக் கடந்தார். அதாவது கேட்ச் மற்றும் ஸ்டம்பிங் சேர்த்து.


அஷ்வின் நேற்று மேலும் ஒரு சாதனை நிகழ்த்தினார். 18வது டெஸ்ட் போட்டியிலேயே 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இந்திய வீரர் என்ற சாதனையை நேற்று அவர் நிகழ்த்தினார்.


சச்சின் டெண்டுல்கர் சிறப்புத் தபால் தலை வெளியிடப்பட்டது. மேலும் சச்சின் உருவம் பொறித்த தங்க நாணயத்தில் நேற்றைய டாஸ் போடப்பட்டது.


கடைசி டெஸ்டில் விளையாடும் சச்சினுக்கு பலதரப்பிலிருந்து வாழ்த்துக்கள் குவிந்தாலும் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் வாழ்த்து சிறப்பு வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிற்து.
Loading...
tamizilnews. Powered by Blogger.