Face Upward - Widget

சச்சின் சம்பாதித்த நாணயங்கள்! | Sachin earned coins!

Loading...

தனது பயிற்சியாளர் ராமாகந்த் அச்ரேக்கர் தனக்கு அளித்த நாணயங்கள் என் வாழ்க்கையில் விலை மதிப்பற்றது என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.


கிரிக்கெட் பயிற்சியின் துவக்க காலத்தில் சச்சின் டெண்டுல்கருக்கு சிவாஜி பார்க்கில் பயிற்சி அளிக்கும்போது அச்ரேக்கர் ஒரு ரூபாய் நாணயங்களை பரிசாக அளிப்பது வழக்கம்.


அதாவது பேட்டிங் பயிற்சியின் போது ஸ்டம்பின் மீது அச்ரேக்கர் ஒரு ரூபாய் நாணயத்தை வைப்பாராம், பயிற்சியில் சச்சின் ஆட்டமிழக்காமல் ஆடினால் அந்த நாணயம் சச்சினுக்குச் சொந்தம் என்பது உடன்படிக்கை. இதுபோன்று நிறைய நாணயங்களை சச்சின் சம்பாதித்துள்ளார்.


இது குறித்து சச்சின் கூறியிருப்பதாவது:


இளம் வயதில் கிரிக்கெட் ஆட்டத்தின் போது அவுட் ஆகாமல் கடைசி வரை பேட் செய்தால் எனது ஆரம்ப கால பயிற்சியாளர் ரமாகாந்த் அச்ரேகர் ஒரு ரூபாய் நாணயத்தை பரிசாக அளிப்பார்.


என்னை பொறுத்தமட்டில் அது தான் என்னுடைய விலைமதிப்பற்ற ஞாபகச் சின்னமாகவும், பொக்கிஷமாகவும் கருதுகிறேன். எனது 40 -வது பிறந்த நாளில் அஞ்சனா அளித்த ஆச்சரியமான பரிசுப்பொருள்.


குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலியின் கையெழுத்திட்ட ‘பாக்சிங் க்ளோவ்.’ அதனை சிறப்பான நினைவுப்பொருளாக எனது வீட்டில் வைத்து இருக்கிறேன். ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேன் கையெழுத்திட்டு வழங்கிய பேட்டை விலைமதிப்பற்ற பரிசாக வீட்டில் பேணி பாதுகாத்து வருகிறேன்’ என்றார்
Loading...
tamizilnews. Powered by Blogger.