Face Upward - Widget

பேரறிவாளனை விடுதலை செய்யக் கோரி அவரது தாயார் மனு | Perarivalanai petition demanding the release of his mother

Loading...

பேரறிவாளனை விடுதலை செய்யக் கோரி அவரது தாயார் அற்புதம்மாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை மனு அளித்துள்ளார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, கடந்த 22 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் உள்ளது.பேரறிவாளன் அளித்த வாக்குமூலத்தில் சொல்லாத சில வார்த்தைகளையும் தான் அதில் சேர்த்ததாக சி.பி.ஐ. முன்னாள் அதிகாரி தியாகராஜன் கூறியுள்ளார். இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


இந்நிலையில், பேரறிவாளனை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க கோரி அவரது தாயார் அற்புதம்மாள், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மனு அளித்துள்ளார்.இது குறித்து முதலமைச்சரின் தனிப் பிரிவில், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் நேரில் அளித்தார்.மனுவில்,சி.பி.ஐ. முன்னாள் அதிகாரி தியாகராஜன் கருத்தையும் அற்புதம்மாள் சுட்டிக்காட்டியுள்ளார்.
Loading...
tamizilnews. Powered by Blogger.