Face Upward - Widget

இயற்கையை மீறிய செக்ஸ்! வாயில் புற்றுநோய் வந்த கணவன்! | oral sex! Husband had cancer in the mouth!

Loading...


அகமதாபாத்தில் வசிக்கும் ஒரு நபருக்கு வாயில் கேன்சர் வந்ததற்குக் காரணம் அவரது மனைவியின் இயற்கையை மீறிய செக்ஸ் ஆசையினால்தான் என்று மருத்துவர்கள் கணித்துள்ளனர்.


இந்த நபரின் மனைவி கணவனை மீண்டும் மீண்டும் "ஓரல் செக்ஸ்"-ற்கு வலியுறுத்த இவரும் எண்ணற்ற முறை இணங்கியுள்ளார்.


இதனால் அவருக்கு வாயில் கேன்சர் நோய் ஏற்பட்டுள்ளது. இவர் கஸ்தூப் படேல் என்ற புற்று நோய் நிபுணரை அணுகியுள்ளார்.


முதலில் மருத்துவரால் வாய் புற்றுநோய்க்கு காரணம் கண்டுபிடிக்க முடியவில்லை. பிறகு அவருடன் பேசிப் பேசி அவரது செக்ஸ் பழக்க வழக்கங்களை கேட்டறிந்துள்ளார்.


அப்போது இந்த மனிதர் உண்மையைக் கூறியுள்ளார். அதாவது ஒவ்வொரு முறை மனைவியுடன் உறவு கொள்ளும்போதும் இவரது மனைவி 'ஓரல் செக்ஸிற்கு' கணவனை வலியுறுத்தியுள்ளார்.


ஆமதாபாதில் உள்ள எச்.சி.ஜி. கேன்சர் மையத்தில் இப்போது இந்த நபர் சிகிச்சை பெற்று வருகிறார்.


இந்த நோய் பற்றி டாக்டர் படேல் கூறுகையில், "இந்த வகையான கேன்சர் 'ஹியூமன் பாப்பிலோமா வைரஸ்' என்பதனால் உருவாகிறது. இது குணப்படுத்தக்கூடியதே, பதட்டப்படவேண்டிய அவசியமில்லை. சரியான நேரத்தில் இதனை கணித்து விட்டால் அகற்றி விடலாம்" என்றார்.


ஆனால் இதுபோன்ற 'ஓரல் செக்ஸ்' காரணமாக தொண்டை, மற்றும் வாய்ப்புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது என்று அவர் எச்சரித்துள்ளார்.
Loading...
tamizilnews. Powered by Blogger.