Face Upward - Widget

ஓட்ஸ் சம்பா ரவை இட்லி | Oats, semolina batter Samba idly

Loading...


தேவையானவை:


ஓட்ஸ் - ஒரு கப்,


சம்பா கோதுமை ரவை - அரை கப்,


தயிர் - ஒரு கப்,


கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்,


பச்சை மிளகாய் - ஒன்று,


கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு,


இஞ்சி - சிறிய துண்டு


கொத்தமல்லித் தழை - சிறிதளவு,


எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,


உப்பு - தேவையான அளவு.


செய்முறை:



• இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.


• ப.மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்


• முதலில் ஓட்ஸை வறுத்து பொடி செய்து கொள்ளவும்.


• பிறகு, சம்பா ரவையை சிவக்க வறுத்து, இரண்டையும் கடைந்த தயிரில் சேர்க்கவும்.


• கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து இத்துடன் சேர்க்கவும்.


• கறிவேப்பிலை, இஞ்சி, கொத்தமல்லித் தழை, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றையும் கலந்து 30 நிமிடம் ஊறவிடவும்.


• பிறகு, இந்தக் கலவையை இட்லி தட்டில் ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.


• சுவையான, சத்தான ஓட்ஸ் சம்பா ரவை இட்லி ரெடி.
Loading...
tamizilnews. Powered by Blogger.