Face Upward - Widget

உதயநிதியுடன் சாமி கும்பிட்ட நயன்தாரா | Nayantara with Udhayanidhi Sami kumpitta

Loading...


மாஸ்டருடன் காதல் முறிந்ததும் இந்து மதத்துக்கும் தனக்குமுள்ள உறவையும் முன்னாள் டயானா ம‌ரியம் கு‌ரியன் முறித்துக் கொள்வார் என்றுதான் பலரும் நினைத்தனர். ஆனால் டயானா ம‌ரியம் கு‌ரியன் நயன்தாரானது ஆனதுதான் என்பதை பளிச்சென்று பழனியில் தெரியப்படுத்திவிட்டார்.


இது கதிர்வேலன் காதல் படப்பிடிப்பு முழுவீச்சில் திண்டுக்கல் பக்கம் கணக்கன்பட்டி கோம்பைப்பட்டியில் நடக்கிறது.


அதற்கு பக்கம்தான் பழனி. இவ்வளவு துhரம் வந்துவிட்டு முருகனை த‌ரிசிக்காமல் சென்றால் எப்படி? ரோப் கார் மூலம் மலையேறியது உதயநிதி, நயன்தாரா ஜோடி. நயன்தாராவை படமெடுக்க அனுமதித்தவர்கள் உதயநிதியை மட்டும் புகைப்படம் எடுக்க அனுமதிக்கவில்லை (தாத்தா கோவிச்சுக்குவாரோ?).


மனமுருகி முருகனை வேண்டிவிட்டு ரோப் கா‌ரில் அடிவாரம் வந்து பறந்துவிட்டனர் இருவரும். இந்த திடீர் த‌ரிசனத்தை எதிர்பாராத பக்த கோடிகள் கொஞ்ச நேரம் முருகனையே மறந்து நயன்தாராவை வேடிக்கைப் பார்த்தது முருகனையே வேதனைப்படுத்தியிருக்கும்
Loading...
tamizilnews. Powered by Blogger.