Face Upward - Widget

மகள்தான் என்னோட வீக்னெஸ் | My daughter is my weekness

Loading...

சத்ருக்கன் சின்காவின் மகள் சோனாக்ஷி சின்கா, அனில் கபூரீன் மகள் சோனம் கபூர், தர்மேந்திராவின் மகள் இஷா தியோல் என்று நடிகர்களின் மகள்கள் சினிமாவில் நுழைந்திருக்கிறார்கள்.


இஷா தியோலால் தாக்குப் பிடிக்க முடியாமல் திருமணத்தை நோக்கி தாவிவிட்டார். மற்ற இருவரும் முன்னணி நடிகைகள். ஸ்ரீதேவியின் மகள் ஜானவியை நடிகையாக்கும் முயற்சியும் நடந்து வருகிறது.


கடல் கடந்து அமெரிக்காவில் வசித்தாலும் சைஃப் அலிகானின் மகளுக்கும் நடிகையாகும் ஆசை இருக்கத்தானே செய்யும்?


சைஃப் அலிகான் கரீனா கபூரை திருமணம் செய்தது இப்போது. 1991 ல் அவருக்கும் நடிகை அம்திர் சிங்குக்கும் திருமணம் நடந்தது பலருக்கு தெரியாது. அந்த பந்தத்தில் சாரா என்ற மகளும், ஒரு மகனும் சைஃப் அலிகானுக்கு இருக்கிறது. சாரா தற்போது அமெரிக்கா கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். பேஷன் ஷோக்களில் கலந்து வரும் அவரின் அடுத்த இலக்கு, சினிமா.


சாரா தாராளமாக சினிமாவுக்கு வரட்டும். ஆனால் அதற்கு முன் ஒரு டிகிரியை அவர் முடிக்க வேண்டும் என சைஃப் தெரிவித்திருக்கிறார். சினிமா என்பது எல்லோரும் நினைப்பது போல இல்லை. சின்னச் சின்ன விஷயங்கள் நிறைய இழக்க வேண்டிவரும். சினிமாவில் வெற்றி பெற்றால் நல்லது. சாதிக்க முடியாமல் போனால் வேறு எந்த வேலைக்கும் போக முடியாது, வெறுமையில்தான் கழிய வேண்டும் என்று சினிமாவின் பாதகங்களையும் சைஃப் சுட்டிக் காட்டியிருக்கிறார்.


சாரா தனது படிப்பை முடித்ததும் உலகில் எங்கு வேண்டுமானாலும் வசிக்கலாம், எந்தத் தொழில் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் ஒரு டிகிரியை முடிப்பது முக்கியம் என தந்தையாக அறிவுரை வழங்கியிருக்கிறார். மேலும், சினிமாவில் நடிப்பதாக இருந்தால் முதலில் தனது உடம்பை குறைக்க வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறார்.


சைஃப் இவ்வளவு கவலைப்பட காரணம், பெண்களை பெற்ற எல்லா தகப்பன்களையும் போல சாராதான் சைஃபின் வீக்னெஸ். இதையும் அவரே தெரிவித்துள்ளார்.
Loading...
tamizilnews. Powered by Blogger.