Face Upward - Widget

விரைவில் முதிர்சியடையும் வேலையில்லா பட்டதாரிகள் - ஆய்வறிக்கை | Mutirciyataiyum unemployed youths soon - Research

Loading...

மனித உடலில் உள்ள 23 ஜோடி குரோமோசோம்கள் தான் பாரம்பரியம் மற்றும் பழக்க வழக்கங்கள் உள்ளிட்டவற்றை நிர்ணயிக்கும் DNAவாக உள்ளது இதனை பாதுகாக்கும் வகையில் குரோமோசோம்களின் முனைகளில் டீலோமர் என்ற பகுதி உள்ளது.


மனிதனுக்கு வயது ஆக, ஆக, இந்த டீலோமரின் நீளம் குறைந்து கொண்டே வரும். லண்டன் மற்றும் பின்லாந்து பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள், 1966ம்.


ஆண்டில் பிறந்த 5,620 பேரை தங்களது ஆய்விற்கு எடுத்துக் கொண்டனர். இவர்களின் ரத்த மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.


இதில், 2ஆண்டுகளுக்கு மேலாக வேலைக்கு செல்லாத ஆண்களிடத்தில், வாழ்நாளை நிர்ணயிக்கும் டீலோமரின் நீளம் மிக குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது.


பெண்களிடத்தில் இந்த வித்தியாசம் காணப்படவில்லை. வேலையில்லாத ஆண்கள், சமூக காரணிகளால் பெரிதும் பாதிக்கப்படுவதால், அவர்கள் விரைவில் முதிர்ச்சியடைந்து, துரித மரணத்திற்கும் அவர்கள் ஆளாவதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
tamizilnews. Powered by Blogger.